நகரப்பேருந்தை தவறவிட்ட
பள்ளிச் சிறுமிகள் இருவர் கையாட்டலுக்குப் பணிந்து நின்ற
பெட்ரோல் குதிரை
ஏற்றிப் பறக்கத் தொடங்கிற்று.
எவ்வளவு தள்ளி அமர்ந்தாலும்
ஊர்ச்சாலை பள்ளமும் மேடும்
முதுகில் மென்முலைகளின்
சூட்டை பரவச் செய்ய
காமசர்ப்பம் மெல்ல தலைதூக்கி
ஊறத்தொடங்கிற்று.
நிறுத்தம் வர
அவளின் கண்களைப் பார்க்காமலே
குதிரையை முடுக்கி விடைபெற
எத்தனிக்கையில்தான்
அவள் அந்த கள்ளமில்லா சிரிப்பை
உதிர்த்தபடியே கூறினாள்
தேங்க்ஸ்னா.
நுனிநாக்கில்
நாகம் கொத்தினாற்போல
சுளீரென்றது உச்சந்தலைக்குள்.
- ஸ்டாரன்