செம்மரத்த வெட்டப் போயி
செத்துப்போன எம் தோழரே.
அய்நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு
அநாதையா போயிட்டயே.
பாவி போலீஸ்காரன் உன்ன
பாவம்பார்த்து விட்டிருக்கலாமே.
காட்டுக்குள்ள வெச்சி
கதையை முடிக்கறப்ப
உன் பொன்டாட்டி புள்ளைய நெனச்சயா
உன்ன சூது பண்ணி கூட்டிப்போன
அந்த தேவடியாப்பயன் புரோக்கர நெனச்சயா
குண்டடி பட்டு துடிக்கயில
எம் தோழரே!
உம் குருதி நிலத்துல கொட்டயில
இந்த பாவி சாமியெல்லாம்
பாடையில போனதா.
ஈரக்கொல நடுங்குதே
எம் தோழரே
என் இதயமெல்லாம் பதறுதே
எம் தோழரே
கட்டையோடு கட்டையா
கெடக்கிறயே அந்தக் காட்டுக்குள்ள
காடு மேடெல்லாம் அழுவுதடா
உன் பொண்டாட்டி புள்ளைங்க
கதறும் சத்தத்தில
அந்த திரு வெங்கடத்தானின்
காதும் கிழிந்து போனதடா
பட்டினிக்கு வாக்கப்பட்ட
பஞ்சப்பரதேசியான நம்மல
கொன்னானே அந்தப் பாவி போலீசு
பாட்டாளி நான்
சாபம் உடுறேன் தோழரே
போலீசுகார நாய்ங்களா
அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும்
கூட்டிக்கொடுக்கும் மாம பயலுகளா
உங்கள கருவருக்க வருவாங்கட
எங்க தோழங்க
கோடாலி புடிச்ச
எங்க கையால உங்க கொடல
உருவற நாள் சீக்கிரம் வரும்டா.
- செ.கார்கி