1. வறுமையின்
நிறம் சிவப்பு..
எல்லா சிக்னலிலும் தெரிகிறது
கை ஏந்தியபடி
இன்னும்
பலர்...
2. தங்கை வயதிற்கு வந்தவுடனே
முதிர்ந்தது....
அக்காவின் திருமண கனவு
அம்மாவிற்கு.....
3 .உறவுகளின்
நிர்ணயம்
காந்தி சிரிக்கும்
காகிதத்தில்
தீர்மானிக்கப்படுகிறது
4. .குப்பை பொறுக்கி
சீர்திருத்தம்
செய்தேன்...
இந்தியா
குப்பையானது....
- தமிழரசி (