சவக்குழியை தோண்டுபவன்
ஆழத்தை தீர்மானிப்பதில்லை
அவன் தீர்மானிப்பது
அங்கே வசிக்க வருகிறவனின்
செளகரியத்தை
அவன் அனுபவங்கள் வைக்க ஓர் அலமாரியை
பார்க்க வருகிறவர்களிடம் பேச
ஒரு சன்னலை
வலியை போட்டு மூடிவைக்க
ஒரு சின்ன அறையை
உட்புறமாக தாளிட்டுக்கொள்ள
ஒரு கதவை
திரும்பவும் கண்டெடுக்க முடியாத
ஒரு மறைவை
சவக்குழியின் ஆழம் தீர்மானிப்பதில்லை
உயிர்த்தெழலை.
கீற்றில் தேட...
சவக்குழி
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்