கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சமதர்ம அரசை அமைக்கும் பணியைத்
தமதாய்க் கொள்ளாக் காம ராசர்
கல்வியை மறுக்கப் பட்டோர்க் களித்த
நல்வழி தன்னைப் போற்றவே செய்வோம்
மார்க்சின் லெனினின் பேரைச் சொல்லிப்
பார்ப்பனர் ஆட்சி குலையாது காப்போர்
எம்மால் இகழப் படுபவர் ஆவார்

((பெருந்தலைவர்) காமராசர் சோஷலிச அரசை அமைக்கும் பணியைத் தமது பணியாகக் கொள்ளவில்லை. (ஆனால் சமத்துவத்தை உண்டாக்கும் நோக்கத்துடன்) கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியைத் தந்த அவரது நல்வழியைப் போற்றவே செய்வோம். (அதே சமயத்தில்) கார்ல் மார்க்சின் பெயரையும் லெனினின் பெயரையும் சொல்லிக் கொண்டு (ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரக் கல்வி பெறுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல்) பார்ப்பனர்களின் ஆட்சி குலைந்து விடக் கூடாது என்று (அதைப்) பாதுகாப்போர் எம்மால் இகழப்படுபவர்களே ஆவர்.)

- இராமியா