கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பொருளே உலகை ஆளும் நிலையில்
அருளே பெரிதெனும் பாரத நாட்டில்
பஞ்சமர் சூத்திரர் திறமை இருப்பினும்
மிஞ்ச விடாது விரயம் செய்வதும்
திறனிலாப் பார்ப்பனர் உயரே இருக்கப்
பிறழ்வது அரசின் செயற்பா டாதலால்
அருளை உண்மையில் போற்றிட வேண்டின்
வருண முறையை ஒழித்திட முனைவீர்

(பொருளாதாரம் தான் மனித சமூகத்தை ஆளுகின்றது. ஆனால் (பொருளைவிட) அருளே பெரிது என்று கூறப்படும் இந்தியாவில், திறமை இருந்தாலும் பஞ்சமர்களையும் சூத்திரர்களையும் (திறமைக்கு ஏற்ற) உயர்நிலைகளுக்குப் போகவிடாததால் மனித வளம் வீணாகிறது. திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் (அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி) உயர்நிலை வேலைகளில் இருப்பதால் (நிர்வாகம் சீர்கெட்டு) அரசின் செயல்பாடுகள் பிறழ்கின்றன. அருளைப் போற்ற வேண்டும் என்று கூறுபவர்கள், உண்மையானவர்களாக இருந்தால் (திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும் திறமை இருந்தாலும் சூத்திரர்களும் பஞ்சமர்களும் கீழ்நிலை வேலைகளைத் தான் செய்ய வேண்டும் என்றும் பகவத் கீதையில் கூறப்பட்டு உள்ள) வருணாசிரம முறையை ஒழிக்க முன் வர வேண்டும்)

- இராமியா