பரத நாட்டின் பொதுமை யோரே
சுரண்டலை ஒழித்திட முதலியை எதிர்ப்பது
போதும் என்றே பார்ப்பன எதிர்ப்பைச்
சூதாய்த் தவிர்க்கும் பொதுமை யோரே
பார்ப்பனர் ஒழியாது முதலியும் ஒழியார்
பார்ப்பனர் இருக்க முதலியை ஒழித்தால்
பணிகளை வருண முறையில் பிரித்துப்
பணியிலோர் இல்லை இதுவே சமதர்மம்
என்றே ஏய்ப்பர் என்பத னாலே
இன்றே ஏற்பீர் பார்ப்பன எதிர்ப்பை
(இந்திய நாட்டின் பொதுவுடைமைக் கட்சியோரே! சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்றால் முதலாளிகளை ஒழித்தால் போதும் என்று கூறி பார்ப்பன எதிப்பைத் தந்திரமாகத் தவிர்க்கும் பொதுவுடைமைக் கட்சியோரே! பார்ப்பனர்கள் ஒழியாது முதலாளிகள் ஒழிய மாட்டார்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் முதலாளிகளை (மட்டும்) ஒழித்தால் (அதன் பின் அமையும் சமூகத்தில்) வருணாசிரம முறையில் உயர்நிலைப் பணிகளைப் பார்ப்பனர்களுக்கும், கீழ்நிலைப் பணிகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிரித்து அளித்து விட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாதலால், இதுவே சோஷலிச சமூகம் என்று கூறி ஏய்ப்பார்கள் என்பதால், முதலில் பார்ப்பன எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்)
- இராமியா