முதலியின் அரசில் வேலை யின்றிக்
கதறியும் குமுறியும் வாடுவர் இளைஞர்
பெண்களின் சுமையோ அதனினும் கொடிதே
மண்டி யிட்டு இறைஞ்சுவ தாலே
உள்ளம் உருகித் தீர்வினைக் கொடாரே
முள்ளினை முள்ளால் களைவது போன்றே
அறமெதிர் மறக்குண முதலியின் அரசை
அறவழி மறத்தினால் அழிப்பதே தீர்வு
(முதலாளித்துவ அரசில் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் கதறியும் குமுறியும் (மனம்) வாடுவார்கள். பெண்களின் சுமையோ அதைவிடக் கொடியதாக இருக்கும். (முதலாளிகளிடமோ, அரசிடமோ) மண்டி இட்டுக் கெஞ்சுவதால் அவர்கள் உள்ளம் உருகித் தீர்வினைக் கொடுத்துவிட மாட்டார்கள். (விஷ) முள்ளினை (வேறு நல்ல) முள்ளினால் எடுப்பது போல அறத்திற்கு எதிரான மறக் குணம் கொண்ட முதலாளித்துவ அரசை அறவழியிலான மறக் குணத்தினால் அழிப்பதே (சரியான) தீர்வு ஆகும்.)
- இராமியா