இறுக்கிக் கட்டப்பட்ட உனது
வலது கையினைத் திமிறிக் கொண்டே
கீழ்நோக்கி கூப்பாடு செய்கிறாய் நீ-
நீ மட்டுமே இருக்கும் அந்த
விண்கலமானது மெதுவே தன்
நிலையில் உயர்ந்து கொண்டிருக்கிறது
உடைபட்ட எனது முட்டிகளை மறந்து
வானில் புள்ளியாய்த் தேய்ந்து கொண்டிருக்கும்
உன்னை நிதானமாய்க் கண்களில் இருத்தி
விலாவில் சிறகுகள் முளைக்கும் வரை
அண்ணாந்து ஓலமிட்டுக் கொண்டிருக்கிறேன் நான்...
- அருண் காந்தி (