விலையில்லா அரிசி
விலையில்லா வேட்டி சேலை
விலையில்லா பசுமைவீடு
விலையில்லா தொலைக்காட்சி
விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்
விலையில்லா ஆடு, மாடு
விலையில்லா படிப்பு மற்றும் பாடநூல்கள்
விலையில்லா மிதிவண்டி
விலையில்லா மடிக்கணினி
விலையில்லா காலனிகள்
விலையில்லா புத்தகப்பை, குறிப்பேடுகள், வரைபட புத்தகம், கணித கருவிப்பெட்டி
விலையில்லா முட்டையுடன் கூடிய சத்துணவு
விலையில்லா பள்ளி மாணவர்களுக்கான பேருந்துப் பயணம்
விலையில்லா தாலிக்கான தங்கம் மற்றும் உதவித்தொகை
விலையில்லா கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி
விலையில்லா மகப்பேறுக்கால முன், பின் கவனிப்பு
அனைத்தும் சரி
நாற்பதை நெருங்கிக்கொண்டிருக்கும்
அக்காளுக்கு யார் தரப் போகிறீர்கள்
ஒரு விலையில்லா நல்ல வரனை?

- அமுதாராம், மன்னார்குடி