சஞ்சலங்களின்றி பஞ்சணையில்
சயனித்திருக்கும் யுவராணிக்கு வீசப்படும்
வெண்சாமரத்தின் மீது விழுந்து
தெறிக்கிறது
வெண்சாமரக் கன்னியின்
வியர்வைத் துளி........
காலம் காலமாய் தகிப்பேறிய
அந்த அடிமைச் சேடிப் பெண்ணின்
வெக்கை நீரில்
இனி தீக்கிரையாகலாம்
சுகந்தரும் சுகந்தமிகு வசந்த மண்டபம்!
- ஸ்ரீதர்பாரதி