பனிமலைக் காடும் கனிவள நிலமும்
நனிசிறக்க ஆண்ட வினைஞர் ஆட்சி
வஞ்சனை தன்னில் வீழ்ந்த பின்னே
துஞ்சிய தாக மாறிய வளமெலாம்
அயலார் தமக்கு மூலப் பொருளாய்ப்
பயனிலா வகையில் ஆளப் படுதே
(பனிமலைக் காடும், வளமான நிலமும் (சோவியத் ஒன்றியத்தில்) சோஷலிச ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது சிறப்பான முறையில் கையாளப்பட்டன. வஞ்சனையால் அந்த ஆட்சி வீழ்ந்த பின்னர் அவ்வளங்களைப் பயன் படுத்தும் வழியறியாது, அந்நியர்களுக்கு மூலப் பொருட்களாக விற்றுப் பிழைப்பை நடத்துகின்றார்களே!)
- இராமியா