கொண்டை சிலுப்பி
றெக்கை அடித்து பறந்து திரிகிறது
பங்காளி வீட்டுச்சேவல்
எங்கள் முற்றத்தில்
பழைய பகை
மனசில் புகைய
கைவசம் கற்களற்ற
காரணத்தால்
பாம்படங்களைக்
கழற்றி எறிகிறாள்
அந்தக் காலத்திலேயே
பங்காளிச் சண்டை என்றால்
அரிவாள் ஏந்தும் அப்பத்தா
- ஸ்ரீதர்பாரதி