புரட்சி மேதை லெனினின் பாதையில்
அரசை நடத்திய சோவியத்து மக்கள்
சதுப்பு நிலத்தையும் விளைநில மாகச்
செதுக்கும் ஆற்றலை இயல்பாய் அடைந்தனர்
ஏய்ப்பவர் தன்னை ஏற விட்டபின்
காய்க்கும் வளமுடை நிலத்தின் பயனையும்
உணரத் திறனின்றிக் கச்சாப் பொருளாய்
வணங்கி அயலார்க்கு விற்கும் இழிவைச்
சுமந்து அலைவது பெருந்துயர் அன்றோ
(புரட்சி மேதை லெனினின் பாதையில் அரசை நடத்திய சோவியத் மக்கள் (எதற்கும் பயன்படாது என்று நினைக்கப்பட்ட) சதுப்பு நிலத்தையும் விளைநிலமாக மாற்றும் திறமையை இயல்பாகவே அடைந்து இருந்தனர். (ஆனால் இப்பொழுது) ஏய்க்கும் (முதலாளித்துவப் பொருளாதார) முறைக்கு வழிவிட்ட பின், வளமான நிலத்தையும் பயன் படுத்தும் வழி தொ¢யாமல் கச்சாப் பொருளாக விற்கும் இழிவைச் சுமந்து அலைவதைக் கண்டால் பெரும் துயர் ஏற்படுகிறதே!)
- இராமியா