கீற்றில் தேட...

1. நேசம்

பிரபஞ்ச அளவு
காகிதத்தில்
உன்னைப் பற்றிய
என் ஆசைக் கனவுகளை
எழுதி முடித்த பின்னும்
மீதமுள்ளவையோ
கோடானு கோடி!

2. கிருஷ்ணன் கால்கள்

கல்யாணமாகி
நான்கு வருடங்களாகக்
குழந்தையில்லாத ரமா
நீர்த்த மாவுக்கரைசலில் நனைந்த
துணி உதவியோடு
தரையில்
கிருஷ்ணன் கால்கள் வரைந்தாள்

தரையிலிருந்து
மனத்திற்கும்
மனத்திலிருந்து தரைக்கும்
மாறி மாறிக்
குதித்து விளையாடின
அந்தக் குட்டிக் கால்கள்