அடர்ந்த செம்பவள வனத்தை
வெண்சிறகுகளையும் வண்ணப் புன்னகையையும் கொண்டு
அரசாள்கிறாள் நிலவதனி..
அரண் மறைந்த ஒரு நாள்,
வனத்தின் மையத்தில்
கருஞ்சிறகுகளுடனும் வெண்புன்னகையுடனும்
கந்தர்வனொருவனை
அவள் காண நேர்கிறது.
அவனும் அவளும் விழிகளாலேயே
சில தினங்களுக்கும்
மொழியினாலே சில தினங்களும்
பேசிக் கொள்கின்றனர்..
தங்களை மறந்த ஒரு காலத்திற்குப் பிறகு
உடல் மூலமாகவும் பேசிக்கொள்ள
தீப்பொறிகள் மெலிதாய் கிளம்பி
சிறகுகள் அழிந்ததையும் மறந்து
துயில் கொள்கின்றனர் தினமும்..
எண்ணி 30 வாரங்களுக்குப் பிறகு
வனமே கொண்டாடும் விதம்
இளவரசியின் வருகை நாள் குறிக்கப் பெறுகிறது.
இன்னும் கூடுதலாக 90 நாட்கள் கழித்து
அரசியும் இளவரசியும்
அரியணையில் அரசாண்டபடி சிரித்துக் கொண்டிருந்தனர்.
எழுதப்படாத ஒரு சரித்திரத்தை
மௌனத்தால் கதைத்துக் கொண்டிருந்தன,
சாம்பல் துகள்களுக்கிடையில் கருஞ்சிறகுகளும்
வெண்புன்னகையும்...

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.