இருளில் நீளும் மின்வரியின் இறுதியில் விழுந்து சொல்லாகிறது
ஒரு காற்புள்ளி..

சொற்கள் அர்த்தமற்றுப் போகும் என்றபடி
வீசிப் போகும் கோர்வையின் விரல் பிடித்து நடக்கிறது,
உருவத்தின் நிலையை மறந்தபடியும்,
உருவத்தின் தேவையை மறுத்தபடியும்..

துகள்களின் கூட்டு எண்ணிக்கை
மீண்டும் தூணாகாது என்பதில் துவங்குகின்றன,
பிரசுரிக்கச் சேர்த்து வைத்திருந்து
சொற்களாய் உருமாறி கொண்டிருக்கும் காற்புள்ளிகளிலிருந்து
வெடித்து நீர்க்கும் அர்த்தங்கள்...

அர்த்தங்களின் இடைவெளி ஒன்றி அச்சில் வார்க்கும்
ஓர் நீண்ட சொல் உருவாவதை
உரக்கச் சொல்வதற்கான தேவை இருப்பில் இல்லை..

காற்று விடுத்துப் போகும் ஒற்றை முற்றுப்புள்ளியை நோக்கி ஓடுகிறது
விழ மறந்த சொல்லீர்ப்பு..

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.