அப்சல் குரு..!
நீ நம்பிய கடவுள்
கடைசி வரை உன்னை
காப்பாற்றவேயில்லை..!

உனக்கான மரண தண்டனையை
எதிர்க்க வேண்டியவர்கள் எல்லாம்
மதவெறியேறி
ரிசானாவின் படுகொலையில்
பரவசமடைந்திருந்தனர்..!

உன்னைக் கொன்றது
உண்மையில்
தேச பக்தியல்ல;
தேர்தல் பக்தி..!

குரல்வளை நெரித்து
குருதியைக் குடிக்கும்
பக்தி என்பது
எளிய மக்களின் மீது
எல்லா காலத்திலும்
கட்டவிழ்த்து விடப்படும்
மிருக வன்முறை..!

ஈரோட்டுத் தந்தையை
ஏற்காதவன் எல்லாம்
அக்குள் வேர்வையை
வாசனைத் திரவியம் என்று
வாதிடுகிறான்..!
பிணங்களின் மீதேறி
மதங்களில் மகிழ்கிறான்..!

புனிதங்களின் கனிகளை
புதைத்து வைத்ததனால்
ஊறி வரும் மதுவில்
மதங்கள் ஊட்டுவது
போதனைகள் அல்ல;
போதை வெறி..!

- அமீர் அப்பாஸ்