கீற்றில் தேட...

இருள் கரைந்துவிட்டிருந்த
ஒரு பின்யாமத்தில்
கசிந்து வழிந்துகொண்டிருந்த‌
சோடியம் விளக்கொளியில்
கரைந்தபடி விழுவதும்
விழுந்தபடி கரைவதுமாய்த்
தூறிக்கொண்டிருந்த மழையை
வெறும் மழையாய் மட்டும்
ரசிக்கமுடியவில்லை...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)