காரல் மார்க்சின் கூர்ந்த அறிவின்
வீரத்தில் விளைந்த சமூக அறிவியல்
முடிபுகள் கண்டு அஞ்சிய முதலிகள்
கடிந்து விரட்டினர் நாடுகள் தோறும்
உலகக் குடிமகன் என்றே ஏற்ற
தலைமகன் கருத்துகள் வென்றன என்றும்
வீழ்ந்தன என்றும் மாறுபடக் கூறினும்
ஆழ்ந்து நோக்கின் வெல்கிற தெனலாம்

(கார்ல் மார்க்சின் கூரிய அறிவிலும் வீரத்திலும் விளைந்த சமூக அறிவியலின் முடிவுகளைக் கண்டு அஞ்சிய முதலாளி வர்க்கம், அவரை நாடுகள் தோறும் விரட்டினர். (இந்நிலையில்) தன்னை (எந்த ஒரு தனி நாட்டின் குடிமகன் அல்ல) உலகக் குடிமகன் என்று பிரகடனம் செய்து கொண்ட மாமேதை கார்ல் மார்க்சின் கருத்துகள் வென்றன என்று ஒரு சாரரும் வீழ்ந்தன என்று ஒரு சாரரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறினாலும், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், அவை வென்று கொண்டு இருக்கின்றன என்று அறியலாம்.)

- இராமியா