புரட்சி வீரர் பிடல்சொல் கேட்டேன்
பரந்தஇவ் வுலகில் பசிப்பிணி நீக்கவும்
புவிவெப்பம் தடுத்துக் காத்திடும் வழியிலும்
செவிகொடா மக்களின் பக்குவ மின்மை
உலகில் ஒருபுறம் மலிந்து கிடக்கத்
துலக்கிட வேண்டிய அறிஞர் குழாமோ
வரும்பொருள் உரைத்துத் தீர்வுக் கஞ்ச
இருபெரும் பிரிவும் செயலின்றி இருப்பதை
அறிந்து வருந்தி மனம் நோகின்றேன்
(பரந்த இவ்வுலகில் பசிப் பிணி நீக்கவும், புவி வெப்ப உயர்வைத் தடுத்து இவ்வுலகை அழிவில் இருந்து காப்பாற்றக் கூடியதுமான (சோஷலிச) வழியை ஏற்பதில், (தடையாக) மக்களின் (அரசியல்) பக்குவமின்மை மலிந்து கிடக்கிறது; இதை விளக்கிக் கூறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அறிஞர்களோ, வருகின்ற ஆபத்தை மட்டும் சொல்கின்றனரே ஒழிய (சோஷலிச உற்பத்தி முறை தான் இப்பிரச்சினைகளில் இருந்து மீள ஒரே வழி என்று) தீர்வு சொல்ல அஞ்சுகின்றனர். (தங்கள் நலனுக்காகப் போராட வேண்டிய) மக்கள் (வழிகாட்ட வேண்டிய) அறிஞர்கள் ஆகிய இரு பிரிவினரும் செயலின்றி இருப்பதைச் சுட்டிக் காட்டிய புரட்சி வீரர் பிடல் காஸ்ட்ரோவின் பேச்சைக் கேட்டு (உலகம் உய்யும் வழியில் உள்ள தடைகளை) அறிந்து மனம் நோகின்றேன்)
- இராமியா