என்னுடையதென்று என்னிடம் எதுவுமில்லை

பிரபஞ்சம் எங்கும் உயிர்களைப் பிரசவித்த

காமத்தின் உச்சி முகர்ந்த வாசம்

எலி மருந்து தின்று

இறந்து போனவளின் வெஞ்சினம்

பறவையின் கூரிய  இறகினையொத்த

எனது விழிகளில் சுரந்தோடும் கருணை

கட்டற்று அணல்தாவும்

காட்டுத் தீயின் பெருங்கோபம்

வேலிகளைத் தாண்டிப் பூத்தரும்பும்

மலர்களின் மென்மை

பசித்து வருந்தும் வரியவர்க்கு

ஈயும்

தாய்மையின் வீச்சம்

துரோகத்தின் எல்லை மீறுகையில்

பீறிடும் கொலைவெறி

எல்லாம் உன்னுடையதுதான்

உன்னுடையதை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன்

மகளே

Comments

3 comments

3
கி.சார்லஸ் [email protected]
அருமை....
ஆத்மார்த்தி
அணல்தாவும்

காட்டுத் தீ

பறவையின் கூரிய இறகினையொத்த

எனது விழிகளில் சுரந்தோடும் கருணை

//மிக அருமையான உளப்பாடு.எளிமையான வார்த்தையாடல்களில் வலிபிசகாது வெளிப்பட்டிருக்கிற வார்த்தைகள்.தனதான கீறல் நிமித்தம் கைக்கொண்ட கல்லை மிகப் பலமாக எறிகிற மொழி.நல்ல கவிதை.
கு.ப.அருண்பிரசாத், திருவாரூர்.
கட்டற்று அணல்தாவும்

காட்டுத் தீயின் பெருங்கோபம்

வேலிகளைத் தாண்டிப் பூத்தரும்பும்

மலர்களின் மென்மை

மனதுகுள் சாரல் அடிக்கிறது இந்த வரிகள்
தொடரட்டும் தோழியே.................

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.