கீற்றில் தேட...

அந்தி நேர
பின் பொழுதொன்றில்
மயக்கத் தொடங்கியது
உன் ஞாபகம்...

தற்செயலாய் தொடங்கிய
கனவுகளின் தினமொன்றில்
தலைகாட்டிய உன்
நினைவுக்குள்
தடுமாறி நிதானமிழந்தன
வார்த்தைகள்...

வசப்படவேண்டிய நேரத்தில்
வாய்த்து விடாமல்
வசதியாய் வந்து விழும்
இன்றைய வார்த்தைகளை
கொன்று ஒழிக்கிறது பேனா...

எப்படியாயினும் என்ன?
இக் கவிதை
என் காதலைச் சொல்லும்
இல்லையேல்
என் தனிமையைக்
கொல்லும்...