யோசிக்க மறந்த
கனமொன்றில்
தொலைந்த நாட்கள்
ஆல விருட்சமென
வேர்பரப்பி
இருள் நீளும்
தருணங்கள்
வற்றாச் சொற்களில்
எழுதிய
பேசா மொழியின்
இலக்கியங்கள்
ஆறாத் தனிமையின்
சுடரில் கருகிடும்
விட்டில் பூச்சிகள்
இன்னும் கிடைக்கவில்லை
என்றோ தொலைத்த
புத்தகத்தின்
கடைசி பக்கங்கள்
அதீதன் ......