பெட்ரோல் விலை
எகிறியதால்
கடவுள் மண்ணெண்ணையை
தேர்ந்தெடுத்தார்
இருப்பில்லா காரணத்தால்
மனதை மாற்றி
தூக்கில் ஏறினார்
அண்டசராசரங்களைச் சுமக்கும்
தோள்களின்
வலிமை தாங்காது
கயிறு அறுந்தது
விஷம் குடிக்க
நினைத்தவரின்
கண்டத்தில் ஏதோ
உறுத்தியது
துப்பாக்கிகள் எப்போதும்
சர்வாதிகாரிகளின் சொற்களையே
கேட்கின்றன
நிகழ்த்தப்பட்ட
கொடுங்கொலைகளின்,
மௌன சாட்சியாக
இருக்க விரும்பாமல்
இரயில்களும், பஸ்களும்
இயங்காத ஒருநாளில்
இக்கவிதைக்குள்
ஒளிந்துகொண்டார்....
அதீதன் .....