வெட்கித் தலைகுனிகிறேன்; வெட்கித் தலைகுனிகிறேன்
நானும் இந்தியன் என்பதை எண்ணி வேதனையில்
வெட்கித் தலைகுனிகிறேன்;
கூப்பிடும் தூரத்தில் எங்கள் பாலகர்களின்
கூக்குரல் கேட்டபோது கொடுவாளைத் தூக்க
வேண்டிய சொந்தங்கள் நாம்
கொடும்பாவி எரித்ததைத் தவிர வேறேதும் செய்ய முடியா
கோழையாய் இருந்த தமிழன் என்பதில்
வெட்கித் தலைகுனிகிறேன்;
உயிரைத் தீண்டாதே; பிறர் உடைமைகளை
அபகரிக்காதே என்ற புத்த மகானின் சிலையை
நிறுவ ஒன்னரை லட்சம் தமிழர் ரத்தம் குடித்த
சிங்கள இனவெறியனை வரவேற்கும் இந்தியக்
குடிமகன் என்பதால் வெட்கித் தலைகுனிகிறேன்;
தன் பிள்ளையைத் தீண்டும் எறும்பைக் கூட
கடிந்து கொள்ளும் தாயைப் போல் மதிக்கும்
என் இந்திய திருநாடே !
என் தங்கையின் மார்பகத்தை அறுத்து அதை
அணிவகுப்பாக்கிய இனவெறியனுக்கு சிவப்புக்
கம்பளம் விரித்த இந்திய நாட்டில் வாழ்வதை
எண்ணி வெட்கித் தலைகுனிகிறேன்;
வரலாறு தியாகத்தில் எழுதப்படுகிறது;
விடுதலை ரத்தத்தால் வரையப்படுகிறது;
தீயினில் வெந்த தமிழரின் தியாகத்தை
தீயினில் பொசுக்கிய இந்தியக் குடிமகன்
என்பதில் வெட்கித் தலைகுனிகிறேன்;
எங்கள் உயிரோடு ஒப்பந்தம் போட்டு
எங்கள் உணர்வுகளை காலில் மிதித்து,
கள்ளக்காதலை நல்ல காதலாய்
மாற்றத்துடிக்கும் இந்திய அரசே !
வாழ்வையே போராட்டக் களமாக்கி, எங்கள்
வீரர்கள் சிந்திய ரத்தத்தையும் சிவப்புக்
கம்பளத்திற்கு வண்ணமாய்த் தீட்டிய
இந்திய திருநாட்டின் குடிமகன் என்பதில்
வெட்கித் தலைகுனிகிறேன்;
அடிமைத்தனத்தை ஒழித்தோம் - அதையும்
அகிம்சையால் ஒழித்தோமென பெருமை பேசும்
என் காந்தி பூமியே ! வெள்ளைக் கொடி ஏந்தி
வந்த வீரர்களை வெட்டிச் சாய்த்த கொடூரனுக்கு
வெண்சாமரம் வீசும் இந்தியத் திருநாட்டின்
மைந்தன் என்பதில் வெட்கித் தலைகுனிகிறேன் ;
'போரை நிறுத்து; புத்த பூமியை ரத்த பூமியாக்கதே
ரத்த சொந்தங்கள் அங்கே ரத்தக் களறியாய் துடிக்குதே'
என்று இந்திய முன்றலில் நின்று கதறினோமே
உம் காதில் விழவில்லையே! மழலை பேசும்
பச்சிளம் பிஞ்சுகள் பசியால் துடிக்குதே என்று பரிதவித்தோமே
உம் கல் மனம் கரையலையே ! நித்தம் தன்னுயிரை
சித்தம் செய்த தமிழர்கள் தியாகத்தை தீட்டாய் எண்ணி
திமிரில் மிதக்கும் இந்திய அரசே உன்னுள் வாழும்
தமிழன் என்பதில் வெட்கித் தலைகுனிகிறேன்;
கதர் உடையை பெருமை பேசும் இந்திய பேரரசே
காவி உடையுடன் கை கோர்த்து ரத்தக் காட்டேரியை
உள்ளே விட்டதன் மூலம் உன் காவி முகத்தைக் காட்டி
விட்ட உன்னை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன் ;
பழைய கட்டிடத்தை உடைக்க முனைந்தவனுக்கு;
உடைக்கவில்லை,  உடைக்க முனைந்தவனுக்கு
தூக்கு தண்டனை; பல லட்சம் தமிழர்களின் வயிற்றில்
கட்டி  நெருப்பை அள்ளிப் போட்டவனுக்கு சிவப்புக்
கம்பளமா? என் இந்திய பேரரசே உன் நீதியை எண்ணி
வெட்கித் தலைகுனிகிறேன்;
கார்கில் பெருமை பேசும் என் பாரதத் திருநாடே
உன் காலில் மிதிபடும் அளவே உள்ள சிங்கள
அரசுக்குப் பயந்து நடுங்கும் உன் கையாலாகத் தனத்தை
எண்ணி வெட்கித் தலைகுனிகிறேன்;
கூடங்குளம் அணு உலையை நிறைவேற்றத் துடிக்கும்
என் இந்திய திருநாடே அந்த கூடங்குளம் அளவே உள்ள
சுண்டைக்காய் சிங்கள இனவாதத்துக்கு அஞ்சி
நடுங்கும் உம கோழைத்தனத்தை எண்ணி வெட்கித்
தலைகுனிகிறேன்;
பள்ளி மாணாக்கனாய் உன் தேசியக் கொடியை பார்த்து
நெஞ்சை நிமிர்த்தி தலை வணங்கினேன் - இன்று
இனக் கொடுங்கோலனை உள்ளே விட்ட உன் கொடியை
என் காலில் போட்டு மிதிக்க வைத்த உன் கோர முகத்தை
நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்; இனி என்றைக்கும்
உன் கொடி என் காலடியில் தான்; உன்னையும் எம் இன
காலடியில் விழ வைக்காமல் என் விழி மூடாது.....
இந்தியன் என்று சொல்ல வெட்கித் தலைகுனியும் ...

- அங்கனூர் தமிழன்வேலு