கீற்றில் தேட...

1. தொலைந்த குரல்...

*************************

யாரோ தொலைத்த குரல் ஒன்று

எனது கானகத்தில்...

அலைந்து...அலைந்து விரிகிறது

இன்னமும் அறியப்படும் சாத்தியமற்று.

*******************************************

2. சொற்களாலான உலகம்.

****************************

சொற்களால் விரியத் துவங்கியது

என் உலகம்.

பின் -

சுருங்கி விடுகிறது...

அதீதமான சொற்களின்

அலைக்கழித்தல்களால்.

ஊசலாடும் நாட்கள்...

நிலை பெறத் துவங்கும்...

மௌனத்தின் விளிம்புகளில்...

நகரும் திசை குறித்த தீர்மானங்களற்று.

************************************************