கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மெல்ல வந்து என்னடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயினும் எட்டிக்
காயெனக் கசந்து உமிழ்ந்தார் ஆயினும்
உழைப்பவர் தமக்கு விடுதலை அளிக்கும்
பிழையிலா சமதர்ம அமைப்பு ஒன்றே
புவிவெப்பம் உயர்த்தும் தொழிலைத் தடுக்கும்
அவியா திருக்க மரங்கள் வளர்க்கும்
உலகில் உயிரினம் தொடர்ந்து வாழ
நலமாய் வழியை வகுக்கும் என்பதை
மாற்ற முடியா தென்பதே உண்மை

(உழைக்கும் மக்களுக்குச் சுதந்திரத்தை அளிக்கும் பிழையில்லாத சோஷலிச அமைப்பில் மட்டுமே புவி வெப்பத்தை உயர்த்தும் தொழில்களுக்குத் தடை விதிக்க முடியும்; ஏற்கனவே உயர்ந்து விட்ட வெப்பத்தைக் குறைப்பதற்குப் போதுமான அளவிற்கு மரங்களை வளர்க்கவும் முடியும். (முதலாளித்துவ அமைப்பில் போதுமான எண்ணிக்கையில் மரங்களை வளர்க்க முடியாது; தாவர விளைபொருட்களின் விலையில் சரிவு ஏற்பட்டு, அதாவது நஷ்டம் ஏற்பட்டு, முதலீடுகள் வெள்யே இழுக்கப்பட்டு விடும். போதுமான எண்ணிக்கையில் மரங்களை வளர்க்க முதலாளித்துவப் பொருளாதாரம் வழியைக் கொடுக்கவே கொடுக்காது.)  அதன் மூலம் உலகில் உயிரினங்கள் (அழியாமல்) தொடர்ந்து வாழ வழி ஏற்படும். இவ்வுண்மையை என்னுடைய காலைப் பிடித்துக் கெஞ்சினாலும் மாற்ற முடியாது; எட்டிக் காயைப் போலக் கசந்து என் மீது உமிழ்ந்தாலும் மாற்ற முடியாது.)

- இராமியா