கீற்றில் தேட...

கோடை விடுமுறையில்
ஊருக்குச் சென்ற பொழுதில்..
தந்தையின்
அலமாரியில்
பத்திரிக்கைகள் பார்த்து
பலரின் இல்லத் திருமணங்களையும்
வீட்டு விழாக்களையும்
தெரிந்து கொள்ள
வேண்டியவனாய்..
தூரம் கருதி
சிலரும் ..
வரப் போகிறானா என்ன?
என்று சிலரும்
விட்டு விடுவதால்..
வேண்டியவர்கள்
வீட்டு நினைவுகளாய்
காலக் கண்ணாடிகளாய்..
என்னுள்
மிஞ்சிக் கிடக்கும்
அந்த
அழைப்பிதழ்கள்.

சொந்த ஊர்

செம்மண் பூமியோ
சரளைக்காடோ
தேசிய நெடுஞ்சாலை தவிர்த்த
தண்ணீர் வற்றிய
ஊர்க் காடுகள்..
இன்னும்
தவிப்புடன்
தங்களின்
கதையை சொல்கின்றன..
வளர்ச்சியின் குறியீடாய்த்
தேசிய நெடுஞ்சாலைகளில்
அரைக் கிலோமீட்டருக்கொரு
கல்லூரியாய்
கான்கிரீட் சொர்க்கங்களாய்
தொலைந்து போன
ஊர்களின் தனித்துவம்
சிறு சிறு கிராமங்களில்
சற்றே
மிஞ்சிக் கிடக்கின்றது
அங்குமிங்குமாய்..