ஊருக்குச் செல்வதாய்
உரக்கச் சொல்லிவிட்டு மெதுவாய்
எனை உற்று நோக்குவாய்……..
சீக்கிரம் வாவென கெஞ்சும் என்னிடத்தில்
முடியதென நக்கலாய் சிரித்தபடி
என்னிலிருந்து நகர்ந்து செல்வாய்
நத்தையின் வேகத்தில்…
நீயில்லா எனதறை முழுவதும்
எதையோ இழந்தாற் போல்
மௌனங்கள் புடைசூழ இருள் இருத்தி
நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும்
உன் வருகைக்காய் காத்திருக்கும் தருணங்களில்
நீ வருவதில்லை
நீ எப்போது வருவாய் என்பதும்
எனக்குத் தெரிவதில்லை
நான் எதிர்பாரா நடுநிசிப்பொழுதில்
இரகசியமாய் நம் வீட்டின்
ஓலிப்பெருக்கியை அழுத்திவிட்டு
ஓடி ஒழிந்து கொள்வாய்
யாராக இருக்குமோவென நினைக்கும் போதெல்லாம்
நீயாக பூத்து நிற்பாய்
அழுகை தோய்ந்த பார்வையில்
உன்னை என் முன்னிறுத்தி முகம் சுழிப்பேன்
நம் பிரியத்தின் இரசமொழுக
பூத்திருக்கும் அன்றைய இரவு
இரகசியத்தின் அழகியலாய்…
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இரகசியத்தின் அழகியல்
- விவரங்கள்
- நீதிமலர்
- பிரிவு: கவிதைகள்