பண்ணையின் அடிமைத் தளையின் நீங்கிய
பண்புடைப் பாட்டாளி தன்தொழில் செய்கையில்
சந்தையின் நெருக்கடி இருளைச் சூழ,
குந்தகம் இல்லா வாழ்வை நோக்கிய
வினைஞர் புரட்சி ஏற்றம் காண
புனைந்தார் இலக்கியம் மார்க்சிம் கோர்க்கி
அவரின் ஆளுமை தினையளவு இலாதும்
உவந்தே படைக்கிறேன் சமதர்மம் காண
((நிலப் பிரபுத்துவ சமூகத்தின்) பண்ணையின் அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெற்ற பண்பு மிக்க பாட்டாளிகள், தங்கள் தொழிலைச் செவ்வனே செய்து கொண்டு இருக்கையில் தோன்றிய சந்தை நெருக்கடி (அதாவது முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி) மக்களின் வாழ்வில் இருளைச் சூழ வைத்தது. (இது போன்று) நெருக்கடி ஏற்படாத வாழ்வை நோக்கிய தொழிலளர்களின் புரட்சி ஏற்றம் காண வேண்டும் என்று இலக்கியங்களைப் படைத்தார் மார்க்சிம் கோர்க்கி. அவருடைய ஆளுமையில் தினையளவு கூட இல்லாவிட்டாலும் சோஷலிச சமுதாயம் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நானும் இலக்கியம் (என்ற பெயரில் ஏதோ) படைத்துக் கொண்டு இருக்கிறேன்.)
- இராமியா