கீற்றில் தேட...

என் எலும்புகளை உடைத்து ஒரு வீடு கட்டிய பிறகு
அந்த வீட்டில் மகள்களின் மகள்களுக்கு தாலாட்டு பாடிய பிறகு
சாமானியர்கள் நுழையாத சரித்திரத்தில்
ஒரு நுழைவு வாயிலை அவர்களுக்காக திறந்துவிட்ட பிறகு
அணுகுண்டுகளும் வன்முறையும் புதைக்கப்பட்ட‌ நிலத்திலிருந்து
மலரும் சமூகத்திற்கு வணக்கம் சொல்லிய பிறகு
நாடில்லாமல் அலையும் எல்லா இனங்களும்
ஒரு புதிய நாட்டில் குடியேறிய பிறகு
ஒரு நாள் நிச்சயம் சாவேன்.
ஆனால் வாழும் போதல்ல...