தவெக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இவர்களுக்கு மக்கள் தந்துள்ள GRACE PERIOD முடிந்துவிட்டது. ஆறு மாத ஆட்சிக் காலத்தில் இவர்கள் சாதித்தது என்ன? முதலமைச்சர் விஜய் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்; பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தனி நீதிமன்றம் அமைப்பேன் என்று சொன்னார். குற்றங்களை முன் கூட்டியே தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படை அமைத்தார். எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் அதெல்லாம் கட்டுப்பாட்டுடன் இயங்குகிறதா? அவர் சொன்னது போல நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா?
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தங்கள் குடும்ப உறவுகளைத் தாண்டி இருப்பது காவல்துறை, மாவட்ட நிர்வாகம்; இவர்கள் சரியாக அணுகவில்லை என்றால் அதற்குப் பிறகு வருவது தான் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் (supporting); பிறகு சட்டத்தின் படி உள்ள உயர் அதிகாரம் நீதிமன்றம் தான்.
தவெக ஆட்சி அமைத்த பிறகு, ஆளும் கட்சியில் உள்ள நிர்வாகிகள் பெண்களிடம் தவறுதலாக, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறார்கள் என்றெல்லாம் செய்தி நாளும் வந்து கொண்டே உள்ளது. இப்போது ஒரு படி மேலே சென்று சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆபாச செய்தி அனுப்புவதில் எங்கே உள்ளது பெண்கள் பாதுகாப்பு. அந்தப் பெண்கள் பாதுகாப்பைக் காப்பாற்றும் அதிகாரம் படைத்தவர்கள் தான் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் இவர்களெல்லாம். அதற்குப் பிறகு அந்தப் பெண்கள் பாதுகாப்பை அரசு அதிகாரம் மூலம் உறுதி செய்பவர்கள் தான் அமைச்சர்கள். ஆனால் இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது - கைத்தறித் துறை அமைச்சராக இருக்கக்கூடிய சட்டமன்றத்தில் உங்கள் பின்னாடியே அமர்ந்திருக்கும் ஈரோடு விஜய் பாலாஜி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆபாச செய்தி அனுப்பியுள்ளார். உங்கள் பெயரை - தன் பெயருக்கு முன்னால் பெயரைக் கொண்டவர் என்பதனால் இந்தத் தைரியம் வந்ததா? கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பியுள்ளார். இதற்கெல்லாம் இந்த முதலமைச்சர், தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எதுவுமில்லை!! இது தான் முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் பாதுகாப்பா?
இதுவே ஒரு சாமானிய மனிதன் தன் குறைகளைத் தீர்க்க காவல்துறை உதவி நாடினால் கூட அவருக்கு என்ன நிலைமை ஏற்படும்? அது பாலியல் புகார் இல்லை; சாதாரணமாகச் சாமானிய மனிதன் ஒரு புகார் அளித்தால், தன்னை விடப் பொருளாதாரத்தில், அதிகாரத்தில், சாதியில் உயர்ந்தவராக இருந்தால் இந்தக் காவல்துறை அணுகுமுறை என்னவென்று நமக்குத் தெரியும்; ஏராளமான செய்திகள் பார்க்கிறோம். இதே பாலியல் குற்றம் நடந்ததாகப் பல பெண்கள் இந்த ஆளும் தவெக நிர்வாகிகள் மீது புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பாலியல் குற்றம் ஓர் அதிகாரத்தில் இல்லாதவன் செய்திருந்தால் என்ன தண்டனை கிடைக்குமோ அதை இந்த ஆளும் அரசான தவெகவினருக்கு ஏன் கிடைக்க மறுக்கிறீர்கள்? ஏன் முதலமைச்சரே ஏன்???
வாய்மையே வெல்லும் என்று எல்லா காவல் நிலையத்திலும், நீதிமன்றங்களிலும் உள்ளது எதற்காக?
சட்டம் அனைவருக்கும் சமம் என்பது பொய்யா??
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதெல்லாம் பொய்யா??
முதலமைச்சர் ஜோசப் விஜய் சொன்ன பெண்கள் பாதுகாப்பு இது தானா??
என்ன நடவடிக்கை எடுக்கப்படும்??
அண்ணன், உங்க வீட்டுப் பிள்ளை, உங்களில் ஒருவன் உங்கள் விஜி செய்வது இது தானா??
Silent ஆக இருந்து வேலை செய்வார் என்றெல்லாம் சொன்னார்களே; அதெல்லாம் உங்களுக்கு வாக்களித்த மக்களின் கதறல் சத்தத்தில் இனிமையாக Silent இருப்பதா??
வாயில் பசை போட்டு அடைத்து விட்டீர்களா? வாய் திறங்க CM SIR!!
- ஈரோடு சஞ்சய்