indian oil companiesஇந்தியாவின் பொருளாதார நிலையினை தீர்மானிக்கும் சக்தியாக எரிபொருள் விளங்குகின்றது.

உர நிறுவனத்திற்கு அரசு வழங்க வேண்டிய உர மானியம் ரூ.74 ஆயிரம் கோடியாக கணிக்கப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டு செலுத்த வேண்டிய தொகையிலேயே ரூ.32 ஆயிரம் கோடிகள் அரசு தர வேண்டியதிருப்பதினால், இந்த வருடம் மானியம் நிலுவைத் தொகையாக அதிகரிக்கவே செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

அரசு எரிபொருள் நிறுவனத்திற்கு எரிபொருள் மானியமாக வழங்க வேண்டிய தொகையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு ரூ.63,100 கோடியை அரசு செலுத்த வேண்டியதிருக்கின்றது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இருக்கும் கடன் அளவு மொத்தமாக ரூ.1.62 லட்சம் கோடியாக உள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ரூ.92,712 கோடியும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.42,915 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.26,036 கோடியும் கடன்கள் உள்ளன. இத்தகைய கடன் நெருக்கடியில் அரிசிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகை சரிவர கிடைக்காமல் இருப்பதால் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

ஒருவேளை ரிசர்வ் வங்கி தரும் 1.76 லட்சம் கோடியினை எரிபொருள் நிறுவனத்திற்கு மட்டும் கொடுத்தாலும், இன்னும் சில நாட்களைக் கடத்திட அரசின் மானியங்களை நம்பி வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றன ஏனைய பொதுத் துறை நிறுவனங்களும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா!!

- நவாஸ்

Pin It