மே17 இயக்கம் சார்பில், 'நடந்த வெள்ளப் பேரிடருக்கு யார் காரணம், இனி எதிர்காலத்தில் தடுப்பது எப்படி?' என்ற தலைப்பில் ஞாயிறு அன்று தியாகராயநகர், தேவநாயகம் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது.

chennai flood muslims

கருத்தரங்கில் பங்குபெற்று பேசிய பெரும்பாலான சிறப்பு விருந்தினர்கள், வெள்ளப் பேரிடரின் போது இஸ்லாமியத் தோழர்களின் அளப்பரிய பங்கினை மனதாரப் பாராட்டினர்.

இதற்கு இடையில் பேசிய, இஸ்லாமிய இயக்கத் தோழர் தமிம் அன்சாரி அவர்கள் "இந்த வெள்ளப் பேரிடரில் இஸ்லாமியர் ஆற்றிய பணியை அனைவரும் பாராட்டுவது எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. இஸ்லாமியருடன் இந்துக்கள் சுமூகமாக மாறுவதனால், இனி சில இடங்களில் குண்டுகள் வெடிக்கும்; பழி இஸ்லாமியர் மீது சுமத்தப்படும்" எனக் குறிப்பிட்டார்.

இந்துத்துவ பாசிச கும்பலின் சதி வேலைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வரிகளாக இது அமைந்தது.

கால காலமாக இந்த பாசிச பார்ப்பனக் கும்பலின் கொடூர முகத்தை கணித்து வைத்திருக்கும், அனைவருக்கும் புரியும், தோழர் அன்சாரி அவர்களின் வரிகள் எவ்வளவு ஆழமான , எதார்த்தத்தை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கும் வரிகள் என்று.

இஸ்லாமிய சகோதரர்களின் இந்த அச்சத்திற்குக் காரணம், இந்த பாசிச இந்துத்துவ பார்ப்பனக் கும்பல் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீது பெரும்பான்மை இந்துக்களிடம் விதைத்துள்ள விசம் தான் காரணம்.

உண்மையில் இஸ்லாமியர்கள் தான் பார்ப்பனியத்திற்கு(இந்து) எதிரியா? வெகுசன மக்களுக்கு விதைக்கப்பட்ட உளவியலின் படி. 'ஆமாம்' என்பதே பதிலாக வரும்.

இந்துத்துவா பயங்கரவாதிகள். "இஸ்லாமிய படை எடுப்பில் இருந்து இந்துக்கள் ஒடுக்கப்பட்டனர்" என்ற பச்சை பொய்யைப் பரப்பினர்.

அதை ஆர். எஸ். எஸ் கூட்டம் இவ்வாறு பதிவு செய்து பச்சை பொய்யை கக்கியது "என்றைக்கு இஸ்லாமியர் இந்த மண்ணிற்கு வந்தார்களோ, அன்றிலிருந்து நாம் அவர்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம்"".இவ்வாறு பதிவு செய்தது. ஆர். எஸ். எஸ் தலைவனான கோல்வார்கர். இதுவே முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி இந்துக்களை திசை திருப்ப பயன்படுத்திய முதல் தந்திரம்.

ஆனால் வரலாறு அவ்வாறாக இல்லை. 1893 க்கு முன்னர் இங்கே இந்து, முஸ்லீம் என்ற பகைமையே இருந்ததில்லை. முஸ்லீம் மன்னர்கள் 700 வருடங்கள் ஆண்டார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் இந்த மண்ணிற்க்கு வந்த போது பார்ப்பனிய ஆதிக்கமே இந்த மண்ணை ஆட்கொண்டு இருந்தது. (தாங்கள் ஆண்ட 700 வருடங்கள் இங்கே வாழும் மக்களை கட்டாய மத மாற்றம் செய்யாதவர்கள், தற்போது கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் எனக் காவிக் கூட்டம் பரப்புரை செய்வது எவ்வளவு வஞ்சகமான அவதூறு என்பதை இத்தருணத்தில் நினைவில் கொள்வது அவசியம்)

அப்படி முஸ்லிம்கள். இந்து மதத்திற்கு(பார்ப்பனியத்திற்கு) எதிராக இருந்திருந்தால். குடுமி கூட்டம் ஒரு வருடம் கூட இஸ்லாமை ஆள விட்டிருக்காது.

அந்த காலகட்டத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக ஒரு சிறு கலகமோ. இயக்கமோ எதையும் வரலாற்று வழி நெடுகில் எங்கும் காண முடியவில்லை.

ஆனால் இதை எல்லாம் தாண்டி நடந்தது என்னவென்றால். , எப்படி வெள்ளையர் ஆட்சியுட்பட அனைத்து ஆட்சியிலும் வால் பிடித்ததோ, அதே போல தான் முகலாய ஆட்சியிலும் நடந்தது. முஸ்லிம் ஆட்சியை சுமூகமாக நடத்த பார்ப்பனக் கூட்டம் முழு ஆலோசனை வழங்கியது என்பதை வரலாறு நெடுகெங்கும் காண முடிகிறது.

"திப்பு சுல்தானின் முக்கிய ஆலோசகர்கள் . நிர்வாகிகள் என அனைவருமே பார்ப்பனக் கூட்டம் தான்"

"முகலாய பேரரசான அக்பர் ஆட்சியில் பெரும்பாலோனோர் பார்ப்பனக் கூட்டம்"

இவ்வளவு ஏன். ஆர். எஸ். எஸ் விசக் கிருமிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக, "இந்துக்களை கொடுமை செய்தது ஔரங்கசீப் ஆட்சி" என சொல்லப்படும் அந்த ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வில் . பாதிக்கு பாதி இருந்தது "பார்ப்பனக் கூட்டம்", தான்.

பார்ப்பன பேஸ்வாக்களின் ஆட்சி இருந்த புனே நகரில் 30 சதவீதத்திற்க்கு மேலாக முஸ்லீம்கள் இருந்த சூழ்நிலையில் கூட ஒரு சிறு சச்சரவு கூட நிகழவில்லை.

ஆனால் அந்த காலகட்டத்தில் இந்துக்கள் என்று தற்போது இந்த விஷக் கிருமிகளால் அழைக்கப்படும் 'தாழ்த்தப்பட்ட' மக்களை. கழுத்தில் பானை கட்டி, அதில் தான் எச்சில் துப்ப வேண்டும் எனவும். கையில் துடைப்பத்தை வைத்துக் கொண்டு , தாங்கள் நடந்த அடிச்சுவற்றை ஒழித்துக் கொண்டே போக வேண்டும் எனவும். பார்ப்பனிய கூட்டம் பணித்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். ஆனால் அப்படி பார்ப்பனர்களால் துன்பத்துக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது. இஸ்லாமியர் கரிசனையோடு நடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 1857 இல் நடந்த சிப்பாய் கலகத்தில், இந்து, முஸ்லீம் சிப்பாய்கள் இணைந்தே "பகதூர் ஷா" ஆட்சியை நிறுவ முற்பட்டனர் என்பது மிக முக்கிய விடயம்.

இப்படி வரலாற்று நெடுகிலும் இருந்த இந்து, முஸ்லீம் ஒற்றுமையும். முஸ்லீம் மன்னர்களோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்த பார்ப்பனிய பாசாங்கும் எதற்காக தகர்ந்தது அல்லது தகர்க்கப்பட்டது???

அங்கே தான் இருக்கிறது இன்றைய பார்ப்பனிய சூழ்ச்சியின் மொத்த பரிணாம வளர்ச்சி.

பார்ப்பனக் கூட்டம் முஸ்லிம் மன்னர்களுடன் கூடி குலாவிக் கொண்டு இருந்த அதே காலகட்டத்தில். வர்ணாசிரமம் என்ற பெயரில் ஏனைய சமூக மக்களை தினம் தினம் வஞ்சித்தும், கடும் கொடுமைக்கும் உள்ளாக்கியது.

இந்த மனிதத் தன்மையற்ற, காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து. 19 ஆம் நூற்றாண்டில் பெரும் இடியாய் வந்து இறங்கினார் "ஜோதிராவ் புலே". அவர் தனது பாடல்கள் மூலமாகவும். கவிதைகள் மூலமாகவும். இந்த பார்ப்பனிய கூட்டம் சிறுபான்மையாக இருந்து கொண்டு பெரும்பான்மை மக்களை இந்து வர்ணாசரமம் என்ற பெயரில் அடிமைப்படுத்தியிருந்த வண்டவாளத்தை வெளிக்கொணர்ந்தார்.

இதற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல. அவர் பார்ப்பனக் கூட்டத்தின் கூடாரமாக இருந்த "மஹாராஷ்டரா" மண்ணில் இருந்தே உதித்தது தான் பார்ப்பனியத்திற்கு பேரிடியாக அமைந்தது.

எனவே இத்தனை வருடங்களாக தாங்கள் அனுபவித்து வந்த அத்தனை சுகங்களும். அதிகார போதையும் கை நழுவிப் போகும் என்ற அச்சத்திற்கு வந்தனர். இதனால் பதட்டமடைந்த பார்ப்பன கூட்டம் பல இடங்களிலும் ரகசிய கூட்டம் போட்டு ஆலோசித்தனர். இப்படிப் போடப்பட்ட கூட்டங்களில் மஹாராஷ்டரா மாநிலத்தின் புனே நகரைச் சேர்ந்த பார்ப்பனத் தலைவர்கள் முன் வைத்தது தான். ""இந்து முஸ்லீம் பகைமையை உருவாக்குதல்"".

இதன் மூலம் இந்த மண்ணில் எழுந்து வந்த சீர்திருத்த சிந்தனைகளில் இருந்து மக்களை திசை திருப்பலாம் என்ற கணக்கை போட்டது. அதன்படி தனது முதல் பரிசோதனையை 1893 ஆம் ஆண்டு புனே'வில் நடத்தியது. இந்தக் கலவரம் பார்ப்பனர்களுக்கு அவர்களே எதிர்பாராத வெற்றியைத் தந்தது. அவர்கள் நினைத்தபடியே விசப் பார்ப்பனியத்திற்கு எதிரான சீர்திருத்த சிந்தனையில் இருந்து மக்கள் திசை திருப்பப்பட்டனர்.

இந்த இந்து முஸ்லீம் பகைமை மையப்படுத்தி துவங்கிய இந்த முதல் பரிசோதனை தான், இன்றுவரை ஆர். எஸ். எஸ் கூட்டம் நடத்தும் அனைத்து இந்து முஸ்லீம் கலவரத்திற்கும் முதல் ஊக்கம் தந்த நிகழ்வு.

அதே போல தென்னகத்தில் "ஈ. வெ. ரா பெரியார்", "நாராயண குரு" போன்றோரும் பார்ப்பனியத்திற்கு எதிராக வெகுண்டெழுந்தனர். இதில், "பெரியார்" பார்ப்பனியத்திற்கு எதிராக பெரும் மக்கள் திரள் இயக்கத்தையே கட்டி எழுப்பினார்.

இதை எல்லாம் கணக்கில் கொண்டு அடுத்த கட்டமாக 1925 ஆம் ஆண்டு மஹாராஷ்டராவை சேர்ந்த சத்பவன் பார்ப்பனர்களான ஹட்கேவர் முதலிய 5 பேர் ரகசியாக ஆர். எஸ். எஸ் என்ற பார்ப்பன பயங்கரவாத இயக்கத்தை துவங்கினர்.

இது துவங்கிய நாள் முதல், குண்டுகளை பல இடங்களில் வெடிக்க வைக்கும். "குண்டுகள் வைத்தது இஸ்லாமியர்" என இந்திய உளவுத்துறையான IBயைக் கொண்டு பார்ப்பன ஊடகங்கள் மூலமாக பரப்பும். இஸ்லாமியர்கள் நம்மை அழித்து விடுவார்கள் என்ற உளவியலை மக்களிடையே பரப்பும். உண்மை எதிரியான பார்ப்பனியக் கூட்டம் வஞ்சக சிரிப்பை ரகசியமாக நிமிட்டும்.

அந்த பார்முலாவின்படி ஆர். எஸ். எஸ் வஞ்சகத்தன்மையுடன் நடத்தி மாட்டிக் கொண்ட சமீபத்திய நிகழ்வுகளான "நந்தேத் குண்டுவெடிப்பு", "மாலேகான் குண்டுவெடிப்பு" முதலியன சிறந்த உதாரணம்.

(IB ஏன் அப்படி செய்ய வேண்டும் எனக் கேட்கிறீர்களா?? ஆர்எஸ்எஸ் யை விட. IBயில் அதிக பார்ப்பனர்கள் உள்ளனர். ஆட்களை அங்கே ஆர்எஸ்எஸ் திட்டமிட்டபடி புகுத்தியதில் இருந்தே தெரியும் பார்ப்பனக் கூட்டத்தின் தந்திரத்தின் உச்சம்)

இப்படி திட்டமிட்டு சமீபகாலமாக பரப்பப்படுவது தான். 'ஐஎஸ்ஐஎஸ்'யில் தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் சேர்ந்தார்கள், பெங்களூரில் இருந்து சேர்ந்தார்கள் என்பது. ஆனால் யார் சேர்ந்தார்கள். யாரைக் கைது செய்தார்கள். அவர்கள் பின்புலம் என்ன என ஒரு தகவலும் வராது. கற்பனை கதாபாத்திரங்களுக்காக எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும் என நினைத்திருப்பார்கள்.

ஆக தோழர் அன்சாரி அவர்கள் வெளிப்படுத்திய எதார்த்த உண்மைகளை நாம் எச்சரிக்கை உணர்வோடு பரிசீலித்து, இந்த பாசிச கும்பலை எதிர்கொள்வது அவசியம்.

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்