ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களின் வாக்குமூலங்களைப் பாருங்கள்!

காந்தி கொலையில் பங்கேற்ற கோபால் கோட்சே கூறியது:-

நமது தேசத்திற்குப் பெருங்கேடு விளைவித்த, விளைவித்துக் கொண்டிருக்கிற ஒருவரைத்தான் (காந்தி) ஒழித்தோம். அவர் இந்த தேசத்தை இடைவிடாது இழிவுப்படுத்திக் கொண்டிருந்தார். இந்துக்களில் ஆண் மகன்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் இந்தியர்களுக்கு இதன்மூலம் காட்டியுள்ளோம்’’ என்று காந்தியைக் கொன்றதை ஆண்மையென்று பெருமை கொள்கிறார் கோபால் கோட்சே.

RSS terror group

குஜராத்தில், ஆர்.எஸ்.எஸ். கிளையான விஸ்வஹிந்து பரிஷத் அச்சிட்டு வழங்கிய துண்டறிக்கை:

“எரிமலை கனல் கக்கத் தொடங்கிவிட்டது. அது முஸ்லிம் ஆண்களின் புட்டங்களை எரிக்க, அவர்களே அம்மணமாய் ஆடுகின்றனர். ஆண் குறிகளைக் கட்டுக்குள் வைத்திருந்த கட்டுகளை நாங்கள் அகற்றி, முஸ்லிம் பெண்களின் பிறப்புறுப்புகளை விரியச் செய்து விட்டோம்.’’

(ஆதாரம்: Seniotics of Terrorism, Economic and Political weekly, July 13 2002)

ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், குஜராத்தில் நிகழ்த்திய கொடுங்கொலைகள்பற்றி மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் அவர்கள் நெஞ்சம் பதைக்கப் பதைக்கக் கூறுவதைப் பாருங்கள்!

“உயிருடன் மனிதர்கள் கொளுத்தப்பட்டனர். நெருப்பில் அவர்கள் வெந்துத் துடிக்கும்போது, மதவெறிக் கூட்டம் சுற்றிநின்று கூத்தாடி கும்மாளமடித்தது. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து சிசு வெளியே எடுக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டு, எரிக்கப்பட்டது. உயிருடன் உள்ளவர்களை இப்படிக் கொடுமையாய்க் கொளுத்திக் கொன்றதோடு நிற்காமல், அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் சமாதிகளைத் தோண்டி, உடலை எடுத்து அதன்மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். ஆர்.எஸ்எஸ். சங்பரிவாரக் கும்பல் மனித இனத்தில் சேர்க்க முடியாத கொடூரக் கும்பல்’’ என்கிறார்.

(ஆதாரம்: Reflection on Gujarat Pradesh in Hindu.Rashtra, Economic and Political weekly, June 2002.)

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கரின் கொலைவெறி கூற்று இதோ:

“பெண்பாலாருக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்ற சான்றோர் மரபு மேலோங்கி நிற்பது தற்கொலைக்குச் சமம். இந்த தர்மத்தைக் கடைபிடித்ததால்தான் சிவாஜியாலோ, சின்னாஜி அப்பாவாலோ முஸ்லிம் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய முடியவில்லை. எனவே, இந்த தர்மத்தை மீறி இஸ்லாமியப் பெண்களை வன்புணர்ச்சி செய்ய வேண்டும்’’ என்று ஆவேசம் கொள்கிறார் சாவர்க்கர்.

(ஆதாரம்: V.D.Savarkar, Seven Golden Epochs in Indian History)

தமிழ் மண்ணிலே மதவெறிக் கும்பலின் கூச்சல்:

“பா.ஜ.க.வில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களிடம் நமது சித்தாந்த அடிப்படையையும், வி.எச்.பி., ஏ.பி.வி.பி., பி.எம்.எஸ்., சேவாபாரதி, கல்யாண் ஆசிரம் போன்ற சகோதர அமைப்புகளுடன் நமக்குள்ள பிணைப்புகளையும், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள வைக்கும் உணர்வுபூர்வ கடமைகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்புகளெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தந்த உந்துதலின் அடிப்படையில் கட்டப்பட்டவை. நமது முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.ன் கண்ணோட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் அரசியலில் பா.ஜ.க. என்ற கருவியின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். மேலதிக அங்கீகாரத்தைப் பெறும். ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் கருவிதான் பா.ஜ.க.’’ என்றார் அத்வானி கோயம்புத்தூரில்.

(ஆதாரம்: Quoted by A.G.Noorani, Ibid)

இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காத மதவெறிக் கூட்டம்:

“வி.எச்.பி.யின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் பஜ்ரங்தளத்தின் முக்கிய நோக்கம்’’ என்று கூறும் வினய் கட்டியார், இந்திய அரசியலமைப்பையும், சட்டத்தையும் ஏற்க மறுத்தார். “நீதிமன்ற ஆணைகளின்படி இந்த நாடு நடத்தப்படுவதில்லை... ஒன்றை அழித்துத்தான் மன்றொன்று பிறக்கும்’’ என்கிறார். இவர் முரடர்களையும், காலிகளையும், போக்கிரிகளையும் கொண்ட குண்டர்படையான பஜரங்தள்ளின் தலைவர். பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் இவர்.

(ஆதாரம்: Anand Tettumbde, Ambedkar and Muslim (Myths and Facts) page 17)

இவர் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ். மேனாள் தலைவர் இராஜேந்திர சிங்,

“அரசியலமைப்புச் சட்டத்தில், ‘இந்தியா என்ற பாரத்’ என்பதற்குப் பதிலாக, “இந்துஸ்தான் என்ற பாரத்’’ என்று இருக்க வேண்டும். நமது பண்பாடு கூட்டுப் பண்பாடாக இருக்கக் கூடாது. எந்தவொரு நாடு உயிர்வாழ வேண்டும் என்றாலும் தனித்தனிப் பாகங்களைக் கொண்டிருக்கக் கூடாது. அரசமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும். இந்த நாட்டின் பண்புக்கு ஏற்ப அது இருக்க வேண்டும்’’ என்கிறார்.

(ஆதாரம்: Quoted by A.G.Noorani, A Halt Fentury’s Gory Record)

தொண்டுசெய்த பாதிரியாரையும் அவரது குழந்தைகளையும் உயிருடன் கொளுத்திய கொடூரக் கும்பல்:

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தொண்டாற்றிய கிரகம் ஸ்டெய்ன் மற்றும் அவரது இரு மகன்களையும் எரித்துக் கொன்ற கூட்டம் பஜ்ரங்தள். அவர்களை உயிருடன் கொளுத்திக் கொன்றுவிட்டு “பஜ்ரங்தள் வாழ்க!’’, “தாராசிங் வாழ்க’’ என்று முழக்கமிட்ட கூட்டம்.

இடஒதுக்கீடு, சமூக நீதியின் எதிரிகள்:

அரசின் நிர்வாக எந்திரத்தை உயர் ஜாதியினரான ஆரிய பார்ப்பனர்கள் தங்கள் கையில் வைத்திருந்த நிலையில், அதைத் தகர்த்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் நிர்வாகத்தைக் கைப்பற்றியதால், அதற்கு வாய்ப்பளித்த இடஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பல வகையிலும் முயலும் கூட்டம் இது.

மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த விடாமல் அவர்கள் செய்த அடாவடிச் செயல்கள் நாடறிந்த ஒன்றல்லவா?

பெரியார், அம்பேத்கரின் சமூகநீதிச் சிந்தனைகள், சோசலிச, கம்யூனிசக் கருத்துகளின் செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் வராமல் தடுக்க, ஆர்.எஸ்.எஸ்.சால் ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டது. அதுதான் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.). மாணவர்கள் தங்களின் நியாயமான, ஜனநாயக, பொருளாதார, உயர்கல்வி உரிமைகளைப் பெற, கிளர்ச்சி, போராட்டம் போன்றவற்றைச் செய்யாது தடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய அமைப்பே இது.

ஆர்.எஸ்.எஸ். முதல் அனைத்து பரிவார அமைப்புகளும் ஒன்றே! தப்பித்துக் கொள்வதற்காக அதுவேறு இதுவேறு என்ற தந்திரங்களைச் செய்ய இப்படிப் பிரிந்து நிற்கின்றனர். இவற்றை உருவாக்கியவர்களைப் பார்த்தாலே எல்லாம் ஒன்று என்ற உண்மையை தெரிந்துகொள்ளலாம்.

பஜ்ரங்தளம் விசுவ இந்து பரிஷத்தின் புற இராணுவப் படையாகும். விஸ்வ இந்து பரிஷத் 1964இல் மும்பையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரால் உருவாக்கப்பட்டது. 1984இல், வி.எச்.பி.யின் கிளையாக, வினய் கட்டியர் தலைமையில் உருவாக்கப்பட்டதே (பாபர் மசூதியைக் கைப்பற்ற) பஜ்ரங்தளம். ஆக, எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.ன் கிளைகளே!

எனவே, அனைத்து வன்முறைகளுக்கும், மதமோதல்களுக்கும், கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்.

இவர்கள் வளர்ச்சியே வன்முறை என்ற உரம்போட்டுத்தான் நடைபெறுகிறது. தொண்டு அமைப்பு போல கூறிக்கொண்டு, வன்முறை மதவெறி, கொலைவெறி ஊட்டும கொடும்பாதகச் செயல்களைச் செய்யும் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலை தமிழகத்தில் அனுமதிப்பதும், பேரணி, மாநாடு நடத்த உதவிசெய்வதும், தமிழகத்தைக் கலவர பூமியாக்கி, இரத்தக் களறியை, மதமோதலை உருவாக்கும் செயலாகும்.

எனவே, அரசும் மக்களும் விழிப்போடிருந்து இவர்களை அறவே அடக்கி, ஒடுக்கி, அப்புறப்படுத்த வேண்டும்.

பெரியார் வாழ்ந்து, போராடிய மண்ணில், பண்படுத்திய பகுதியில் பெரியார் வழிவந்ததாய்ச் சொல்லும் அரசு இதில் முனைப்புடன் நின்று ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கூட்டத்தின் சதிகளை உளவுத்துறை உதவியுடன் முறியடிக்க வேண்டும். நீதிமன்றங்கள் இவர்களின் வரலாற்றை, நோக்கை, போக்கை முழுமையாய் அறிந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும். இது அரசு மற்றும் நீதித்துறையின் கட்டாயக் கடமையாகும். மக்கள் நலப் பணியாகும்! அரசும், நீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பானவற்றில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

- மஞ்சை வசந்தன்

Pin It