சகாயம் ஆய்வுக் குழு அமைப்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கண்டனம்!

தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, உ.சகாயம் இ.ஆ.ப. அவர்களை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்ற அமர்வு 11.09.2014 அன்று தமிழக அரசுக்கு உத்திரவிட்டுள்ளது. (MP No.1 of 2014 in WP.16841/2014 இல் Mr.U.Sagayam I.A.S., Managing Director, Co-op Tex as Special officer to Inspect the illegal mining Through out the State)

Sagayamதமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 02.11.2014 அன்று தமிழக அரசின் செ.கு.எண்:205 மூலம் ஒரு அறிக்கை அளித்து உள்ளார். அந்த அறிக்கையில் “மதுரை மாவட்ட ஆட்சியரின் ஆய்வு அறிக்கை சரிதானா என்பதை ஆய்ந்து அறிக்கை தாக்கல் செய்யத்தான் உ.சகாயம் ஐ.ஏ.எஸ்.அய் சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 03.11.2014 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் "உயர்நீதிமன்ற உத்தரப்படி கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது விசாரணைக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, உ.சகாயம் இ.ஆ.ப. அவர்களை சிறப்பு அதிகாரியாக நியமித்திருக்க, தமிழக அரசின் இந்த நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவை தமிழக அரசு முழுக்க முழுக்க அவமதிக்கும் செயலாகும். தமிழக அரசின் இந்த செயலை கனிமவள முறைகேடு-சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் சார்பாக வன்மையாக நாங்கள் கண்டிக்கின்றோம்.

தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுக்க நடந்துள்ள கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உ.சகாயம் இ.ஆ.ப. அவர்களை சிறப்பு அதிகாரியாக நியமிக்காவிட்டால், கனிமவள முறைகேடு-சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் சார்பாக நாங்கள் 'தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்' என தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகளை உ.சகாயம் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்ய தடை ஏற்படுத்தும் செயலை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்

- இரா.சா.முகிலன்,
ஒருங்கிணைப்பாளர்,
கனிமவள முறைகேடு-சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்,
அலைபேசி:7502225658
மின் அஞ்சல் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.