ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும் என தலைநகரில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக இருந்து, லோக்பால் சட்ட வரைவுக்குழுவின் இணைத் தலைவராக பொறுப்பை ஏற்றிருக்கும் சாந்தி பூஷன் மீது பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது லோக்பால் சட்டவரைவுக் குழுவை அதிர்ச்சியடைய வைத் திருக்கிறது.

ஊழலுக்கு எதிராக உருவாக் கப்பட்ட அமைப்பில் ஊழலுக்கு துணை போகும் தலைவரா? என்கிற கேள்வியில் தலைநகர் தகதகத்துக் கொண்டிருக்கிறது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலாளர் அமர்சிங் ஆகியோரி டத்தில் சாந்தி பூஷன் தொலைபேசியில் பேசியபோது, “சில கோடிகளை கொடுத்தால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி விடலாம்...'' என்று சொன்னதாக வெளி யான சி.டி. இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக் கிறது.

இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள சாந்தி பூஷன், சி.டி. தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் தன்னிலை விளக்கம் அளித்த பூஷன், “நான் முலாயம் சிங், அமர்சிங்குடன் பேசியதே இல்லை. அந்த உரையாடலே பொய்யானது. சி.டி. விவகாரத்தின் பின்னணி யில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கும், என் மகனுக்கும் எதிராக சதி செய்கிறார்கள்...'' எனத் தெரிவித்துள்ளார்.

சாந்தி பூஷனின் மகன் பிரபல உச்ச நீதிமன்ற சீனியர் வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் - இவரும் லோக்பால் சட்டவரைவுக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார். சாந்தி பூஷன் முலாயம் சிங், அமர் சிங்குடன் பேசியதாக வெளியாகி இருக்கும் சி.டி.யில், “என் மகன் நினைத் தால் 4 கோடிவரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கி விடுவார்'' என்று சொல்வது போலவும் பதிவாகியிருக்கிறதாம்.

சி.டி. ஆதாரத்தை சாந்தி பூஷன் மறுத்தாலும், அமர்சிங் கின் பேச்சு சி.டி. பதிவுகள் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தவதாகத்தான் உள்ளது.

“சாந்தி பூஷன் - முலாயம் சிங் இருவருக்கிடையில் தொலைபேசி உரையாடலுக்கு நான் ஏற்பாடு செய்து கொடுத்தது உண்மைதான். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் பேசியதைவிட, அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதுதான்...'' என்கிறார் அமர்சிங்.

முலாயம் சிங்கிடம் நான் பேசியதே இல்லை என ஒரேயடியாக மறுக்கிறார் சாந்தி பூஷன். ஆனால் உரையாடலுக்கு நான்தான் ஏற்பாடு செய்து தந்தேன் என ஒரே போடாகப் போடுகிறார் அமர்சிங். அதோடு, “எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது'' என்று வேறு சொல்கிறார். அப்படியானால் அமர் சிங், பெரிய ஒப்பந்தங்களுக்கு "செட்டிங்' செய்து தரும் மீடியேட்டராக செயல்பட்டிருப்பாரோ? அதனால்தான் அவரது பேச்சுகள் கண்காணிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இந்த சந்தேகத்தையும் அமர் சிங்கின் இன்னொரு வாக்குமூலமே போக்கி விடுகிறது.

"எனது உரையாடல்கள் மீடியாக்களில் வெளியானபோது, அதை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தேன். ஆனால் தடை விதிக்கக் கூடாது என அதற்கு எதிராக வாதாடிய வர் பிரஷாந்த் பூஷன். இப்போது அந்த உரையாடல் பதிவுகள் பூஷன்களுக்கு எதிராக பூதமாகக் கிளம்பி நிற்கிறது...'' என்கிறார் அமர்சிங்.

பிரஷாந்த் பூஷன் கூட அந்தச் சி.டி.யில் உள்ளது தனது தந்தை சாந்தி பூஷனின் குரல் இல்லை என்று அடித்துச் சொல்லவில்லை. "தந்தையின் குரலாக இருக்கலாம். ஆனாலும் அதை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்...'' எனக் கூறுகிறார். தடயவியல் நிபுணர்களோ இது உண்மையான சி.டி.தான் என சான்றளிக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 8 பேர் லஞ்சம் வாங்கும் நீதிபதிகள் என்று சாந்தி பூஷன் தெரிவித்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது ஊழல் பேச்சு கள் பதிவான சி.டி. உண்மைதான் என்றே நாமும் புரிந்து கொள்ள முடிகிறது சாந்தி பூஷன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் லோக்பால் நாயகன் அன்னா ஹசாரே! என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It