அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை முடிவில் சர்வதேச அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

       மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, தொலைத் தொடர்பு துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது : கம்ப்யூட்டர், இன்டர்நெட், இமெயில் போன்ற சைபர் கிரைம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம் சமீபத்தில் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் சைபர் கிரைம் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் 11வது இடத்தில் இருந்த இந்தியா 5வது இடத்திற்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

       அந்த நிறுவனம் கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள், தங்களுடைய உற்பத்தி பொருட்களின் அடிப்படையிலேயே முடிவுகளை வெளியிடும். அந்த முடிவுகளில் தவறுகள் இருக்கலாம். மாறுபடலாம், உறுதிபடுத்தவும் முடியாது. சமூக இணைய தளங்களை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். அவற்றை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இவற்றை தடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தத்தை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Pin It