பள்ளி மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்!
பள்ளி மாணவ - மாணவியர் சூரிய நமஸ்கா ரம் (யோகா) செய்ய வேண்டும் என்கிற உத்தரவை பிறப்பித்ததாக சர்ச்சைக்குள் சிக்கியது பீகாரின் நிதிஷ் குமார் அரசு. இது குறித்து கடந்த 19ம் தேதி செவ் வாய் கிழமை, பீகார் சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் “பள்ளி மாணவர்கள் சூரிய நமஸ்காரம் (அசானா) செய்ய வேண்டும் என்று அரசின் சார்பில் எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. இதனை எதிர்கட்சிகள் தேவையற்ற சச்சரவாக மாற்றுகின்றன...'' என தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பீகாரி லுள்ள பள்ளிக் கூடங்களில் படிக் கும் மாணவர்கள் அனைவரும் சூரிய நமஸ்காரம் எனும் யோகா பயிற்சியை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது பீகார் அரசு.
இதை எதிர்த்த பீகார் மாநில எதிர்கட்சிகள், "சூரிய நமஸ்காரம் என்பது இந்து மதத்தின் வழிபா டாகும். சூரியனை வணங்குவது தான் சூரிய நமஸ்காரம். இதை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மாணவர்களும் செய்ய வேண்டும்' என்று வற்புறுத்தப்படுகிறார்கள். இது இந்திய அரசியல் அமைப் புக்கும் நாட்டின் மதச்சார்பற்ற தத் துவத்திற்கும் எதிரானது என்று பலமான குற்றச்சாட்டுகளை எழுப் பின.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக அவை விமர்சித்தன. அப்போதே, இது எல்லா மாண வர்களுக்குமான கட்டாய வழி காட்டுதல் இல்லை. விருப்பமுள் ளவர்கள் செய்யலாம். விருப்பமில் லாத மாணவர்கள் செய்யத் தேவையில்லை என அரசு அறி விப்பு செய்து அப்போதைக்கு ஓர ளவிற்கு பிரச்சினையை தீர்த்தது.
ஆயினும், இந்தப் பிரச்சினை அவ்வப்போது எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலை யில் கடந்த 19ம் தேதி பீகார் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “மாநில அரசைப் பொறுத்தவரை அது மாணவர் கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என எந்த உத்தரவை யும் பிறப்பிக்கவில்லை. அரசின் முதன்மைச் செயலாளர் இது குறித்து, "சூரிய நமஸ்காரத்தை மாணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பது மாநில அர சால் கட்டாயப்படுத்தப்பட்டி ருக்கவில்லை. எனவே வேறு மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
எனவே (கோய் கர்னா சஹாதா ஹை தோ கரே. அவ்ர் ஜோ நா கர்னா சஹாதாஹை நஹின் கரே) மாணவர்கள் விரும்பினால் சூரிய நமஸ்காரம் செய்யலாம். விரும்பா தவர்கள் செய்ய வேண்டிய தில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி பீகார் சட்ட மன்றத்தில் நடைபெற்ற கவர்னர் உரை மீதான விவாதத்தின்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவ ரான அப்துல் பாரி சித்தீக் இப்பி ரச்சினையை எழுப்பியதைத் தொடர்ந்தே நிதிஷ் குமார் பதில ளித்தார் என்பது குறிப்பிடத்தக் கது.
சித்தீக்கின் கேள்விக்கு நிதிஷ் குமார் மேற்கண்டபடி பதிலளித்த வுடன், மாநில கல்வித்துறை, 9 மற் றும் 10ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு சூரிய நமஸ்காரம் என்ற யோகா பயிற்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிற வழி காட்டுதலை வழங்கியிருப்பதை கல்வித்துறையின் ஆவணங்களிலி ருந்து ஆதாரமாகச் சுட்டிக் காட்டி யுள்ளார் அப்துல் பாரி.
இதற்கு மீண்டும் பதிலளித்த முதல்வர் நிதிஷ் குமார், “இது குறித்து எந்தவிதமான உத்தரவும் என் கவனத்திற்கு வரவில்லை (?!) ஆனால் இந்த விஷயத்தை நான் கவனிக்கிறேன்'' என உறுதியளித் துள்ளார்.
அதே சமயம், இந்த விஷயத் தில் எதிர் கட்சிகள் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புகின்றன. இது குறித்த பொது விவாதம் நியாயமற்றது என்றும் எதிர்கட்சி களை கண்டித்துள்ளார் நிதிஷ்.
சூரிய நமஸ்கார பயிற்சியை அனைத்து பள்ளிக் கூடங்களும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்வித்துறை பள் ளிகளுக்கு உத்தரவிட்டிருப்பது தனக்குத் தெரியாது என்று ஒரு முதல்வர் சொல்கிறார் என்றால், ஒன்று முதல்வர் கவர்னர் உரை யின் மீதான விவாதத்தின்போது பொய் சொல்லியிருக்க வேண்டும். அல்லது முதல்வரின் கவனத்திற்கு தெரியாமல் கல்வித்துறையில் ஊடுறுவியுள்ள காவிச் சிந்தனை கொண்ட அதிகாரிகள் இந்த வேலையை செய்திருக்க வேண் டும். இதில் எந்த ஒன்று உண்மை யாக இருந்தாலும் அது கண்டிக் கத்தக்கதே!
“உடனடியாக அது பற்றி நான் கவனிக்கிறேன்...'' என்றும் இதை பொது விவாதம் ஆக்குவது நல்ல தல்ல; நியாயமல்ல...'' என்றும் முதல் வர் நிதிஷ் குமார் பதறுவதும் தனது அரசின் மீதான நற்பெயர் மக்கள் மத்தியில் கெட்டு விடக் கூடாது; தனது அரசு மதச்சார் பற்ற தன்மையோடுதான் நடந்து கொள்கிறது என்பதை வெளிப்ப டுத்த வேண்டும் என்பதற்காக அல்ல! எல்லாம் 2014 நாடாளு மன்றத் தேர்தல் நெருங்கி வருவது தான் நிதிஷ் குமாரை பதற வைத் திருக்கிறது.
உண்மையிலேயே நிதிஷ் குமா ரின் கவனத்திற்கு வராமல் கல்வித் துறை அதிகாரிகளே பள்ளிக் கூடங்களுக்கு இதுபோன்ற வழி காட்டுதல்களை வழங்கியிருக்கி றார்கள் என்றால் அந்த அதிகாரி கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பீகார் மக்களுக்கு முதல்வர் நிதிஷ் மீது நம்பிக்கை பிறக்கும்.
- ஃபைஸல்