யாரவள் தெரியவில்லை
இந்த
இருட்டு வேளையில்
குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறாள்

வானம் பார்த்து
ஏதோ யோசிக்கிறாள்
ஞாபகம் வந்தவளாய்
பூமி பார்த்து
ஏதோ வாசிக்கிறாள்

ஒன்று மட்டும் புரிகிறது- அந்த
பூவனத்தில் தீ எரிகிறது

பார்ப்பதற்கு
பள்ளி மாணவி போல் இருக்கிறாள்
பாடச் சுமையாக இருக்குமோ...

பருவப் பெண்ணாக இருப்பதால்
காதல் சோகமாக இருக்குமோ...

கற்பனை செய்யும்
அழகு பார்த்தால்
கவிதை தாகமாக இருக்குமோ...

என்னவென்று தெரியாமலே
எவளென்று தெரியாமலே
அவள் மீது எனக்கொரு பற்று

ஏனென்றால்
நானும் அவளும் ஒரே ஜாதி
தூக்கத்தை தொலைத்த ஜாதி...