வெள்ளையர்கள் 15.8.1947இல் இந்தியாவிலிருந்து வெளியேறினர்.

சுதந்தரம் வேண்டிப் போராடிய காந்தியாரும் காங்கிரசும் வெள்ளையர் வெளியேறியவுடன், வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை அளித்து, அவ்வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியச் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாணச் சட்டசபைகளின் உறுப்பினர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய அரசியல் நிர்ணய சபை தான், சுதந்தர இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை வரையும் என்று, 1936க்கு முன்னரே வாக்குக் கொடுத்தனர்.

Ban Neet15.8.1947இல் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி. இதில் மத்திய சட்டசபைத் தேர்தலில் வாக்குப் போட 40 விழுக்காட்டு பேர்களுக்கே உரிமை உண்டு. மாகாண சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்போட 14 விழுக்காட்டுப் பேர்களுக்கே தகுதி உண்டு.

இவ்வாக்காளர்களைக் கொண்டு 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியச் சட்டசபை உறுப்பினர்கள், மாகாணச் சட்டசபைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய அவையையே - “அரசியல் நிர்ணய சபை” என்று உலகுக்கு அறிவித்து விட்டு, 9-12-1946 முதல் 26-11-1949 வரையில் அந்த அவையைக் கொண்டு “இந்திய அரசியல் நிர்ணய சபை”யைத் தொடர்ந்து நடத்தி, இந்திய அரசியல் சட்டத்தை நிறைவேற்றினார்கள். இது காங்கிரசு அளித்த வாக்குறுதிக்கு எதி ரானது என்று கூறி, “இது மக்களுக்கு எதிரான சட்டம்” என்று கண்டித்த ஒரே தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. தான்.

இந்தச் சட்டத்தை எழுதத் தொடங்குவதற்கு முன்னரே, பண்டித நேரு தலைமையில் ஒரு குழு இயங்கியது. அது வெனிகல் நரசிங்கராவ் (B.N. Rau) என்ப வரை உலக நாடுகள் பலவற்றுக்கு அனுப்பி - அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்சு, செர்மனி நாடுகளிலிருந்து தங்களுக்குப் பிடித்தமான பகுதிகளைப் படி எடுத்துவரச் சொல்லி, அவற்றை வைத்து, “இந்திய அரசியல் சட்ட முதலாவது வரைவு (The First Draft of the Indian Constitution)” என்பதை எழுதி, அச்சடித்து, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கையில் 18.10.1947இல் தந்தனர்.

அதாவது, பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் 29.8.1947இல் அமைக்கப் பட்ட அரசியல் சட்ட வரைவுக்குழு கூடும் முன்னரே - தாங்கள் வரைந்த முதலாவது அரசமைப்புச் சட்ட வரைவைத் திணித்தனர்.

அந்த வரைவில், ஏற்கெனவே பி.என். ராவ், அயர்லாந்து அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து, “அரசின் சமூக நெறி குறித்த கொள்கைகள் (Directive Principles of Social Policy)” என்ற பகுதியைத் தனக்கு வசதியான தன்மையில் அமைத்தார். இது உள்நோக்கம் கொண்டது.

ஏன்?

பிரிவு 37 : “ஒவ்வொரு குடிமகனும் இலவசத் தொடக்கக் கல்வி பெறுவதற்கு உரிமை உடையவர் ஆவார். இந்தச் சட்டம் நடப்புக்கு வந்த நாளிலிருந்து எல்லாக் குழந்தைகளுக்கும் - அவர்கள் 14 வயது அடைவதற்குள் இலவசக் கட்டாயத் தொடக்கக் கல்வி அளிக்கப்படுவது அரசின் கட்டாயக் கடமையாகும்.” “...and it shall be the duty of the State to provide” என்று அயர்லாந்து அரசியல் சட்டத்தில் உள்ளது.

ஆனால் 1948 ஆண்டைய இந்திய அரசியல் சட்ட வரைவில் விதி 36இல், the State shall endeavour என்றும், 26.11.1949 வரைவில், பகுதி 4-இன்கீழ், விதி 45இல் “the State shall endeavour” என்றும் மட்டும் உள்ளது. அதாவது, “அரசு முயற்சிக்கும்” என்றே உள்ளது. இது குறைபாடு உள்ளது.

மக்களிடம், “கல்வி அடிப்படை உரிமை பகுதியில் இருக்க வேண்டும்” என்கிற கோரிக்கை வலுத்தது. அதை முதன்மையாக வைத்து, 45வது விதியில், “6 வயது வரையில் உள்ள, குழந்தைகளுக்குக் பத்தாண்டு களுக்குள் கட்டாயக் கல்வி தரவேண்டும்” என்றும், உரிமைகள் பகுதியில் “6வயது முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி தர முயற்சிக்கும் என்றும்” விதி 21-A யில் எழுதப்பட்டது.

இப்போது, 1976இல் பிரதமர் இந்திரா காந்தி, அவசரச் சட்ட ஆட்சியில், 42ஆவது திருத்தத்தைத் திணித்து, விதி 45 அடங்கிய பகுதியை, Part IV  என்கிற நான் காம் பகுதியைப் பொது அதிகாரப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றிவிட்டார்.

1919 இந்திய அரசுச் சட்டப்படியும், 1935 இந்திய அரசுச் சட்டப்படியும், 1949இல் பி.ஆர். அம்பேத்கரால் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டப்படியும் “கல்வி” முற்றிலும் மாகாண (அ) மாநில அதிகாரப்பட்டியலில் இருந்ததை நீக்கிவிட்டு 1976இல் பொது அதிகாரப் பட்டியலில் சேர்த்ததால், “கல்வி”யில் மேலதிகாரத்தை முற்றிலுமாக இந்திய மத்திய அரசு கைப்பற்றிக் கொண்டது.

1) மாநில அரசு ஒரு படிப்புத் துறையை மாநிலத்தில் அறிமுகப்படுத்துவதற்கும்

2) தலைமை ஆசிரியர் பதவிக்குத் தகுதிகாண் தேர்வு, மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் தகுதிகாண் தேர்வு, மருத்துவர் படிப்பில் தேறிய பின்னர் மருத்துவராகப் பதவி ஏற்றிட ஒரு தகுதித் தேர்வு என அடுக்கடுக்காகத் தகுதித் தேர்வுகள் என்பது-100க்கு 85 விழுக்காட்டுப் பேராக வுள்ள கீழ்ச்சாதி நாட்டுப்புற - ஏழை மக்களுக்குப் பின்னடைவே ஆகும்.

இவ்வளவு அவல நிலைகளையும் மாற்றிட, நாம் என்ன செய்ய வேண்டும்?

1) கல்வியாளர்களை இந்திய அளவில் ஒன்றுசேர்க்க வேண்டும். அவர்கள் மாநில வேறுபாடுகள் பாராமல், ஒரே முகமாக புதுதில்லியில் கூட ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரே குரலில் பேசச் செய்ய வேண்டும்.

2) 545 மக்களவை உறுப்பினர்களில், பாதிப் பேருக் கேனும் மாநிலப் பட்டியலுக்குக் “கல்வி”யை மாற்ற வேண்டும் - ஏன் என்பதை, அவரவர் மொழியில் அறிக்கைகள் தந்து புரிய வைக்க வேண்டும்.

3) பன்மொழிகளில் வெளிவரும் நாள் ஏடுகளின் ஆதரவைப் பெற்றிட வேண்டும்.

4) புதுதில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 790 பேர்களுள் 500 பேர், 4200 சட்டமன்ற உறுப்பி னர்களுள் 1,000 பேர்.

5) கல்வியாளர்கள்.

6) பன்மொழி மாணவர்கள் அடங்கிய பேரணி, மாநாடு இவற்றைத் தில்லியில் நடத்திட வேண்டும்.

இவ்வளவும் செய்தால்தான், உறுதியாகக் கல்வியை, மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முடியும் என்பது என் கருத்து.

Pin It