உலகத்திலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்பொழுது இந்தியாவில் மக்கள் தொகை சுமார் 130 கோடியைத் தாண்டியுள்ளது. மக்கள் தொகையில் கண்ட வளர்ச்சி வாழ்க்கையில் வளர்ச்சி காண முடிய வில்லை. கைப்பேசி இப்பொழுது சுமார் 105 கோடி (80 விழுக்காடு) மக்கள் பயன்படுத்துகின்றனர். மீதியுள்ளோர் குழந்தைகள் மற்றும் இயக்க இயலாதோர். கைப்பேசி இணைப்பு அட்டை இரண்டு அல்லது மூன்று இணைப்பு அட்டை பொருத்தியுள்ளோர் சுமார் 55 கோடி. ஆக மொத்தம் 160 கோடி கைப்பேசி இணைப்பு அட்டை பொருத்திப் பயன்படுத்தப்படுகின்றது.

பொருத்தப்பட்ட ஒவ்வொரு கைப்பேசி இணைப்பு அட்டைக்கும் ஒரு நாளுக்குக் குறைந்தது ரூ.2/- சேவை வரியாக இந்திய அரசுக்குக் கிடைக்கின்றது. ஒரு அட் டைக்கு ரூ.2/- என்றால், சுமார் 160 கோடி இணைப்பு அட்டைக்கு சுமார் ரூ.320/- கோடி இந்திய அரசின் ஒருநாள் வருமானம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,31,000/- கோடி வருமானம்.

ஒரு துறையில் இவ்வளவு சேவை வரி என்றால் மற்ற துறைகளில் வரும் சேவை வரி, வருமான வரி, விற்பனை வரி, சொத்து வரி, தொழில் வரி, தொழி லாளர் வரி, சாலை வரி, சாக்கடை வரி, தண்ணீர் வரி, கலால் வரி, சுங்க வரி போன்ற பல வரிகளை நுகர் வோராகிய மக்கள் மீது பாமரன் முதல் பணக்காரன் வரை அனைவரிடமும் வரி வசூல் செய்கின்றனர். வழக்குரைஞர், பட்டையக் கணக்கர், பொறியாளர், மருத்துவர் உள்ளிட்டோர் சேவை வரி கட்ட வேண்டும். இந்தச் சேவை வரி சேவை பெறுவோரே சேர்த்துக் கட்டணம் கட்டுகின்றனர். பிள்ளை பெற்றாலும், சேவை வரியைச் செலுத்த வேண்டும்.

இப்படி அனைத்து வழிகளிலும் வரியை வசூலித்த இந்திய அரசு பாமரன் படிக்கக்கூடாது என்பதற்காக நுழைவுத் தேர்வு என்று தேர்வு வைத்துத் தடுத்துள்ளது. ஓட்டு பெற்ற பின் மக்களை மதிக்காத அரசியல்வாதிகளை, கொள்ளையர்களைத் தேர்வு செய்யாமல், நல்லவர்களைத் தேடி கண்டு தேர்தலில் தேர்ந்தெடுங்கள்!

Pin It