எல்லாவிதமான சேலைகளையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருந்த போதிலும், எந்த சேலையையும் உற்பத்தி செய்யாத துபாயில், ஒட்டகம் மேய்ப்பது உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையினை செய்தாவது வாங்கி வரப்படும் துபாய் சேலைக்கு கிடைக்கும் கிராக்கியைப்போலவும்; மனிதர்களை விடவும் நம்மூ¡¢ல் 'ஈ'க்கள் அதிகமாக வசிக்கும் போதிலும், ஒபாமா வீட்டுக்குள் நுழைந்து ஒபாமாவின் இடது கைமேல் அமர்ந்த ஒரு 'ஈ'க்கு கிடைக்கும் மா¢யாதை போலவும்; ஒவ்வொரு நாளும் இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு முழுவதும் தாக்கப்படும் போதிலும், ஏதாவது ஒரு நாட்டில், எப்போதாவது ஒரு முறை, ஏதோ ஒரு மூலையில் தாக்கப்படும் இந்தியனுக்கு கிடைக்கும் மவுசு என்பது 'பர்மா பஜார்' பொருளை போல மதிப்பு வாய்ந்ததாக உள்ளது. இப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க 'பர்மா பஜா¡¢ன்' சமீபத்திய வரவு "ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களே! கைரலாஞ்சியிலும், திண்ணியத்திலும் இன்னும் நாட்டின் பல பகுதியிலும் சக இந்தியன், என்.ஆர்.ஐ. இந்தியனை விடவும் கேவலமாக தாக்கப்பட்டு, மானபங்கம் தொடங்கி கொலை வரை செய்யப்பட்டும் போதிலும் திரும்பிக்கூட பார்க்காத நம்மூர் ஊடகங்கள், எங்கோ ஒரு மூலையில் ஆஸ்திரேலிய இந்தியர் தாக்கப்படுவதை ஒப்பா¡¢யோடு காட்டி வருகிறது. உண்மையில் ஆஸ்திரேலியாவில் என்ன தான் நடக்கிறது?
'வலுத்தவன் எடுத்துக்கொண்டான் இளைத்தவன் தெருவில் நின்றான்' இது தான் பிரச்சனை. உலகின் சிறந்த கல்வியை தருவதாக கூறுவது உட்பட சந்தைப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய கல்விச்சந்தையில் மொத்த இடங்களையும் அதிகம் 'காசு' உள்ள ஆஸ்திரேலிய மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் வாங்கியதும், அதன் விளைவாக அவர்களை விட குறைவான 'காசு' உள்ள ஆஸ்திரேலிய மாணவர்களே தெருவில் நின்றதும் தான் தற்போதய தாக்குதலுக்கு காரணம். அதிலும் குறிப்பாக இந்திய மாணவர்கள் மொத்த எண்ணிக்கையில் 18 சதவிகிதம் உள்ளனர். அதாவது ஒரு லட்சம் பேர். இவர்களின் மூலம் ஆஸ்திரேலிய அரசுக்கு கிடைக்கும் வருமானம் 7 அயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும். அது மட்டும் அல்ல ஆஸ்திரேலிய பொருளாதாரமோ தற்போது அதல பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. அதன் மொத்த உள் நாட்டு உற்பத்தி ஒரே ஆண்டில் 4.2 % திலிருந்து 0.3% மாக வீழ்ந்துள்ளது. வேலையின்மையோ 3.9% திலிருந்து 5.4% மாக அதிகா¢த்துள்ளது. இதன் விளைவு ஆஸ்திரேலியாவிலேயே அஸ்திரேலியன் தெருவில் நின்றான். இப்போது சொல்லுங்கள் ஆஸ்திரேலியாவில் நடப்பது உள்ளவன் இல்லாதவன் மோதலா? அல்லது ஆஸ்திரேலிய இந்திய மோதல? உலகம் முழுவதும் இன்றைக்கு இது தான் நலை! இதனை பயன்படுத்தி எல்லா நாடுகளிலும் இனவாதம் வளர துடித்துக்கொண்டு இருக்கின்றது.
பொருளாதாரம் எப்போதெல்லாம் நெருக்கடியை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் இனவாதம் அதை பயன்படுத்தி வளரும் என்பது தான் உலக வரலாறு. 1930களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தியே ஹிட்லா¢ன் பாசிசம் உலகையே அழிக்கும் அளவிற்கு வளர்ந்தது. இந்தியாவில் 1990களுக்குப்பின் காங்கிரஸ் ஏற்படுத்திய புதிய பொருளாதார கொள்கையும், அதனால் ஏற்பட்ட நெருக்கடியும், வேலையிமையும், தேசப்பிதாவையே கொன்ற மத தீவிரவாத கும்பலை தேசத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது. அப்போது வறிய நிலையில் இருந்த இளைஞர்களை, சாதாரண பொதுமக்களை திரட்டி, உங்கள் வறுமைக்கு காரணம் கொழுத்த இசுலாமியர் என்றும், அதனை தடுக்க தவறிய காங்கிரஸ் என்றும் பொய்யான பிம்பத்தை பிரச்சாரமாக்கி, அதன் மூலம் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தியது. உண்மையில் இந்தியாவில் இசுலாமியர்கள் தலித்துக்களுக்கும் கீழாக இருப்பதாக சச்சார் குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் கொடுத்தது, இனவாத கும்பலின் பொய்யான பிரச்சாரத்தை போட்டுடைத்தது. எல்லா மதத்தையும் சேர்ந்த 83 சதவிகித மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர்களாக உள்ள நம் நாட்டில் இந்த நெருக்கடியினையும் பயன்படுத்தி இனவாதம் தான் வளர எல்லா விதமான வித்தைகளையும் காட்டும். அதன் சமீபத்திய உதாரணம் மராட்டியத்தில் வேலையில்லா இளைஞகளை திரட்டி வட இந்தியர்களுக்கு எதிராக 'இராம்சேனா' ஆடிய கோரதாண்டவம். தமிழ்நாட்டில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கு காரணம் காண அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையில் கலவரத்திற்கான காரணமாக கூறியிருப்பது "வறுமையும் வேலையின்மையும்" தான்.
இதுபோன்ற ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியினையும் பயன்படுத்தி மதத்தை சொல்லி, சாதியை சொல்லி, இனத்தை சொல்லி, மொழியை சொல்லி பலவிதமான பி¡¢வினைவாத சக்திகள் தோன்றி வளரும். அவை உண்மையான இனவாத பாதிப்புக்கு உள்ளாகும் அடித்தட்டு மக்கள் குறித்து பேசாமல் போலியான சுயநல பி¡¢வினைவாதத்தை முன்வைக்கும். உள்நாட்டில் ஒருவனை ஒடுக்கிக்கொண்டே வெளிநாட்டில் தாம் ஒடுக்கப்படுவதாக கூப்பாடுபோடும். அதற்கு எல்லா கூடவே ஊடகமும் ஒப்பா¡¢யும் போடும். இவர்களை நாம் இனம் காணதவறினால் "ஷில்பா ஷெட்டியை" இனவாதத்திர்கு எதிரான போராளியாக்கி, நம் கைகளிலும் அதற்கு ஆதரவாக கோஷம் போட கொடிகளை கொடுக்கும். இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டியதற்கான தீர்வு, ஆஸ்திரேலிய இன வாதத்திற்கு எதிரான இந்திய இன வாதம் அல்ல, வலுத்தவனுக்கும் இளைத்தவனுக்கும் இருக்கும் இடைவெளியை குறைத்து சமன்படுத்த மாற்றுப் பொருளாதாரம். இனவாதமா........? மாற்றுப் பொருளாதாரமா.......? முடிவு நம் கையில்!
- களப்பிரன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தீர்வு இனவாதமல்ல... மாற்றுப் பொருளாதாரமே!
- விவரங்கள்
- களப்பிரன்
- பிரிவு: கட்டுரைகள்