இனிவரும் காலங்களில் மக்கள் விரோதிகளே ஆட்சி செய்வார்கள். எந்தத் துறையை எடுத்தாலும் கையூட்டு இல்லாமல் வேலைகள் நடப்பதில்லை. நீர் நிலைகளைச் சரி செய்ததாகத் திட்டம் போட்டுப் பணத்தை முழுமையாகக் கொள்ளையடித்துள்ளனர். 90 சதவீதம் நீர்நிலைகள் அப் படியே உள்ளன. அனைத்து நீர்நிலைகளும் அரசியல் கட்சியின் தொண்டர்கள் கையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பில் ஏற்படும் போட்டியில் தினமும் வெட்டு, குத்து, கொலைகள் நடக்கின்றன.

நிலங்களை மனைபோட்டு கடந்த 40 ஆண்டுகளாக வீடு கட்டாமல் விவசாயம் செய்யாமல் காலி மனைகளாகவே உள்ளன. 40 ஆண்டுகளில் தானிய உற்பத்தி மிகவும் கணிச மாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற தொழில்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு விலை, உற்பத்தி செய்யுமிடத் திலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது. ஆனால் விவசாய உற்பத்திக்கு விலையே இடைத்தரகர்கள் தான் நிர்ணயம் செய்கின்றனர். விவசாயக் கூலியும் இடுபொருட்களும் உயர்ந்து விட்டன. உற்பத்திப் பொருள்கள் விலை மட்டும் தரகர்கள் நிர்ணயித்தபடி நடக்கின்றது.

மருத்துவமும் கல்வியும் நம்மை ஆட்சி செய்யும் அரசுகள் சரியாகக் கொடுக்கவில்லை. இமயம் முதல் குமரி வரை சமச்சீர் கல்வி இல்லை. கல்வி வியாபாரத்தை ஒழிக்க, எந்த அரசும் முன்வரவில்லை. வாக்கை விற்று வாழ்நாள் முழுவதும் வாழமுடியாது. வாழ்க்கைத் தரம் உயர கல்வித் தரம் உயர வேண்டும். மக்களுக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அரசியல் அமைப்பை உருவாக்குவோம்! மக்கள் விரோதிகளை விரட்டுவோம்!

Pin It