2019 தேர்தலில் எல்லா மாநிலங்களையும் கைப்பற்றத் திட்டம்

தற்போது பாரதிய சனதா பதினொரு மாநிலங் களில் தனித்து ஆட்சியில் இருக்கிறது; ஏழு மாநிலங் களில் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இந்த பதினெட்டு மாநிலங்கள் அன்றியும், மீதியுள்ள மாநிலங்களில் நடை பெறப் போகும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் இப்போதே இவை செய்கின்றன.

இதற்காக ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. இடையிலான மூன்று நாள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 1, 2, 3 செப்டம்பரில், உத்தரப்பிரதேசத்தில், பிருந்தாவன் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மூன்று நாளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தலைமை ஏற்றார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் நாற்பது துணை அமைப்புகளும் இக்கூட்டத்தில் மூன்று நாளும் பங்கேற்றன.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகிகளான பையாஜி ஜோஷி, தத்தாத்ரேய ஹொசபோலே, கிருஷ்ண கோபால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பிரவீண் தொகாடியா ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் நாள் அமர்வில் - ஜம்மு காஷ்மீர் அமைதி நிலவரம் குறித்து விவாதித்தனர். அங்கு இராணுவத்தின் மீது கல் எறியும் முயற்சி குறைக்கப்பட வேண் டும்; அதற்காக இளைஞர்களைத் தேசிய நீரோட் டத்தில் இணைக்க வேண்டும் என்று பேசப்பட்டது.

அதாவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிறப்பு உரிமை கள் பெற்ற மாநிலமென்பதை மாற்றுவதற்குத் திட்டமிடு கிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில், விதி எண். 370, ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்புரிமையை வழங்குகிறது.

அத்துடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், 35ஹ விதியின்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையும், அரசு வேலை பெறும் உரிமையும், ஜம்மு-காஷ்மீர் பூர்வீகக்குடிகளின் வாரிசுகளுக்கே உண்டு என்ற பாதுகாப்பு இருக்கிறது. இந்த 35ஹ-இன்கீழ் உள்ள பாதுகாப்பையும் அடியோடு நீக்க வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. இவை கருதுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் 10, 11, 12, 13 நான்கு நாள்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குப் பயணம் சென்று, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இதுபற்றியுள்ள அச்சத்தைப் போக்க முயற்சித்திருக்கிறார். மேலும், “ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஒத்துழைத்தால், ஜம்மு-காஷ்மீரைத் தேவலோகம் போல் மாற்றுவோம்” என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் நிலைமை இப்படியிருக்க, மேற்கு வங்காளத்தையும் கர்நாடகத்தையும் தமிழ்நாட்டை யும் கேரளாவையும் குறிவைத்து, இந்த எல்லா மாநிலங்களிலும் வாக்குச்சாவடிதோறும் இப்போதே வாக்குச் சேகரிக்கும் பணியாள்களை அமர்த்த பாரதிய சனதா தலைவர் அமித்ஷா திட்டமிடுகின்றார்.

அதாவது, எடுத்துக்காட்டாக, வங்காளத்தில் 77,000 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச் சேகரிப்புப் பணியாளர் களை அமர்த்திடத் தீவிர முயற்சி செய்கின்றனர். இதுவரை, மேற்குவங்க பா.ச.க. கிளை மூலம் 18,000 வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே பணியாளர்கள் அமர்த்தப் பட்டுள்ளனர். அதனால், அமித்ஷா போதிய முயற்சி யெடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

அதாவது, ஆர்.எஸ்.எஸ்.-பாரதிய சனதா இரண்டும் இந்தியாவில் இராம ராஜ்ஜியத்தை 2019இல் நிறுவு வதற்கு இப்போதே திட்டமிடுகின்றனர்.

இவற்றை திராவிடர் இயக்கங்கள், தமிழ்த்தேசிய இயக்கங்கள், பொதுவுடைமைக் கட்சிகள் மற்றும் மார்க்சியப் பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் தீவிரமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

Pin It