இருபது ஆண்டுகளுக்கு முன்பு பொழுதுபோக்கிற்கும் வருமானத்திற்கும் கீரியும் சண்டை போடப் போகின்றது, வாங்க! வாங்க! என்று வித்தைக்காரன் கூப்பிட்டு, கடைசி வரைக்கும் வித்தை காட்டாமல், சிலரை மடக்கி உங்களுக்கு தோசம் உள்ளது; இந்தக் கயிறு கட்டினால் இதுபோகும்; இந்த நேரத்தில் இதைப் பயன்படுத்தாதீர்கள் என்று கூறி, மந்திரக் கயிறு வியாபாரம் செய்வான். பின்னர், பயந்த முகங்களைக் கண்டு அவர்களைக் குறிவைத்து, “உங்களுக்குக் குடும்பத்தில் பிரச்சனை; சடங்கு செய்தால் சரியாகி விடும்” என்றுகூறி, அதிகத் தொகை வாங்கிக் கொண்டு, சடங்கு செய்வார்கள். ஆனால், இதுபோன்ற வித்தைக் காரர்கள் செயலால் எந்தப் பயனும் இல்லை. எனினும் வித்தைக்காரன் பிழைப்பு நன்றாக இருக்கும்.

ஆனால், இன்று நம் நாட்டு மக்களை ஆளும்  மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் நலன் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நதிநீர் பிரச்சனை, நல்ல மருத்துவம், சமச்சீர் கல்வி, குடிநீர் மக்களுக்கு எளிதில் கிடைக்க வழிசெய்யவில்லை.

மருத்துவ வியாபாரம், கல்வி வியாபாரம், குடிநீர் வியாபாரம் தொடங்கிவிட்டனர். இவை நடுத்தட்டு மக்கள் வரை  உள்ளவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. வரு வாய்க்கு வழியில்லை என்று மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துகின்றது. சிந்தித்தால் நல்லவர், கெட்டவர்; நல்லது, கெட்டது தெளிவாகிவிடும். சிந்திக்காமலிருக் கவே சமச்சீர் கல்வி தரப்படவில்லை. மது மட்டும் அரசே ஏற்று நடத்துகின்றது.

மத்திய அரசு ஆட்சிக்கு வருமுன் வெளிநாட்டில் கணக்கில் காட்டாத பணம் 20 ஆயிரம் கோடி உள்ளது. அதை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம். ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் அந்தப் பணத்தைப் பகிர்ந்து கொடுப் போம். அதனால், அனைவரும் வங்கிக் கணக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பணம் போடப்படும் என்ற ஆசை காட்டினார்கள். வெளி நாட்டில் கணக்கில் வராத பணம் வந்திருந்தால், மக்கள் கணக்கில் பணம் வந்திருக்க வேண்டும். இது மக் களை ஏமாற்றிய ஒரு வித்தை.

உள்நாட்டில் கணக்கில் வராத பணத்தைக் கண்டு பிடிப்போம் என்று கூறி, அம்பானி உறவினரை ரிசர்வ் வங்கி ஆளுநராக்கிவிட்டார், மோடி இனி பணம் என்ற பரிமாற்றமில்லை. அம்பானி கொடுக்கும் பணப்பரி மாற்றும் கணினிமயமான இயந்திரத்தின் வழியாகப் பணம் மாற்றப்படும்.

வாக்குப் போட்ட உங்களை, ஒரு நாளைக்கு இவ் வளவு தான் பணம் எடுக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக எடுக்க, செலவு செய்ய உரிமை இல்லை என்கிறது அரசு. உரிமை இல்லாத மக்கள் வாழும் நாடு எப்படி ஒரு சுதந்தர நாடாக இருக்கும்? சிந்திக்கவும்.

பணம் என்று அச்சிட்ட தாள் ஒரே நொடியில் வெற்றுத் தாளாக்கப்பட்டது. இப்படி விரைந்து முடிவெடுக்கும் அரசு, கல்வியில் ஏற்றத்தாழ்வை அகற்றவில்லை; நதிநீர் பிரச்சனைகளை தீர்க்கவில்லை; மதுவை ஒழிக்கவில்லை. இப்படி செயல்படுவதால் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதத்தன்மை வெளிப்படு கின்றது.

சபை நாகரிகம் தெரியாத-சட்ட திட்டங்களைப் படிக்காத, கண்டதைத் தின்னும் பன்றி போல் செயல் படுபவர்களை, இனியும் இம்மக்கள் தேர்ந்தெடுத்தால், தானே தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்ட தற்குச் சமமாகும்.

சிந்தனை வளத்தைத் தூண்டிச் செயல்படுங்கள்! செயல்படுங்கள்!

Pin It