இளைஞர்களை ஒன்றுசேர்த்து, உலகமே வியக்கும் அளவுக்குப் போராடத் தூண்டியது மிக மிகச் சிறந்த விளைவு.

இனி நடக்கும் போராட்டங்கள் (ஆற்று நீர் பிரச்சனை, தாய்மொழிவழிக் கல்வி மற்றும் சமச்சீர் கல்வி பிரச்சனை, நல்ல மருத்துவம் போன்ற பல பிரச்சனைகள்) அனைத்தும் இளைஞர்கள் மூலம் கூட்டாக நடக்க வழிவகுக்கும் என்பது உறுதியாகிவிட்டது சிறந்த விளைவு.

இந்தியாவுக்கு வெளிநாட்டுக் கலப்பின மாடுகளை இறக்குமதி செய்வது, பேரழிவை ஏற்படுத்தும். தொழில் நிறுவனங்களை அமைப்பதை எதிர்த்தும், உடல் நலத்தைக் கெடுக்கும் குளிர்பானங்களைத் தடைசெய்யக் கோரியும், நம் இளைஞர்கள் போராட்டத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது, மிக மிகச் சிறந்த விளைவு.

அவசரச் சட்டம் மூலம் உருபாய் நோட்டுகளை சில மணிநேரத்தில் மாற்றி, ஊழலை ஒழிக்க முயன்ற மத்திய அரசு, ஏன் நீண்டகாலமாக உள்ள காவிரி ஆற்று நீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு போன்ற பல பிரச்சனை களைத் தீர்க்க முடியவில்லை?

அடுத்தவர்களுக்காக நாமும் நம் பாரம்பரியத்தை விட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் எல்லாத் தரப்பினரிடமும் உருவானது சிறந்த விளைவு.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும், ஒன்றுபடச் செய்ததும் இந்தப் போராட்டத்தின் விளைவே ஆகும்.

இளைஞர்கள் எங்கே நம்மை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயத்தை ஏற்படுத்தியதும், சுய இலாபத் தையே கருத்தில் கொண்டு போராடிய அரசியல் கட்சிகளின் எண்ணத்தை மாற்றியதும் மிக மிகச் சிறந்த விளைவு.

இதுநாள்வரையில், பொறுக்கிகளும் அரசியலுக்கு வரலாம் என்று இருந்த வாய்ப்பை முறியடிக்கும் வண்ணமாக - அறிஞர்களும், துணிந்து செயல்படும் இளைஞர்களும் அரசி யலுக்கு வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் சல்லிக் கட்டுப் போராட்டம் அமைந்தது மிக மிகச் சிறந்த விளைவு.

பல மாற்றங்களுக்கு இந்தப் போராட்டம் அடிப்படையாக அமையும் என்பது உறுதியாகியதும் சிறந்த விளைவே!

Pin It