இன்று உலக அளவில் கிறித்துவ மதமும் இசுலாம் மதமும் இருபெரும் மதங்களாகக் கருதப்படுகின்றன. உலகம் முழுதும் இந்த மதங்களைப் பரப்பியவர் யார்? அவர்கள் மதங்களைப் பரப்பக்கையாண்ட உத்திகள் யாவை என்பனவற்றைச் சற்றே சிந்திப்போமானால், நாம் நம் பெரியாரின் கொள்கை களைப் பரப்பவும், அதன்படி நம் மக்களை வழிநடத்த வும் ஏற்றதாக அமையும்.

இருபது நூற்றாண்டுகளுக்கு கிறித்துவ மதத்தைத் தோற்றுவித்த இயேசுபிரான் தன் கொள்கைகள், இலட்சியங் கள் பரப்பிட திருத்தூதர்களை நியமித்தார். அவர்களுக்குத் தன் மதத்தைப் பற்றிய தெளிவான கருத்துக்களை மக்களிடம் பரப்புரை செய்யப் பயிற்சி கொடுத்தார். அவர்கள் உலகம் முழுவதும் சென்று, பல்வேறு உத்திகளைக் கையாண்டு, தங்கள் மதத்தைப் பரப்பினர். அவர்கள் கையாண்ட விதம் :

1. வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள மக்களிடம் நேரிடை யாகப் பழகி, முதலில் அவர்களுக்கு உணவளித்தல்.

2. சுகாதார வசதி, மருத்துவ வசதி அளித்தல்.

3. கல்வியோடு மதத்தைப் பரப்புதல்.

4. சாதிப்பாகுபாடின்றி அனைவரையும் சமமாக மதித்தல்.

இவ்வாறு அவர்கள் இடைவிடாது தொடர்ந்து மக்களோடு மக்களாகக் கலந்து மதத்தைப் பரப்பியதால், இன்று நாடு முழுக்க கிறித்துவக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கூடவே தேவாலயங்கள் இல்லாத இடமே இல்லை என்று வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

அவ்வாறே இசுலாம் மதத்தைத் தோற்றுவித்த நபிகள் நாயகம், தன் இயக்கம் வலுப்பெற இறைத் தூதர்களை நியமித்து உலகம் முழுவதும் இசுலாம் பரவ வழிவகை செய்தார்.

பார்ப்பனர்கள் இந்து மதத்தை உருவாக்கி, காலம் காலமாகத் தன்னுடைய இனமக்கள் கஷ்டப்படாமல் வாழ் வதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாண்டார்கள். அவற்றில் மிக முக்கியமானது “வேதபாடசாலை” அமைத்து, வேதம் கற்பிப்பது. இந்த வேத பாடசாலை என்பது மன்னர் காலத்தி லிருந்து இன்றுவரை தொடர்ந்து இடைவிடாது பார்ப்பனர்களாலும், சூத்திரர்களாலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம், திண்டிவனத்துக்கு அருகில் ஓங்கூரிலும் நடத்தப்படுகிறது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்துக்கு அருகில் ஓங்கூரில் நடக்கும் வேதபாட சாலையை நானும் தோழர் ஆனைமுத்து, தோழர் இரா.மதியழகன் ஆகிய மூவரும் நேரில் சென்று பார்வையிட்டோம். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பன மாணவர்கள் மட்டும் இங்கே பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவளித்து, தங்கும் இடவசதியும் கொடுத்து, இலவசமாகப் பயிற்சி தருகிறார்கள். அதற்குத் தனிப்பட்ட செல்வந்தர்கள் உதவி செய்கிறார்கள்.

நாம் நம் மக்களிடம் சென்று பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொன்னால், “காலம் மாறிவிட்டது; இவனுங்க இன்னமும் சாதி இல்லை; பூதம் இல்லைன்னு சொல்லிக்கிட்டு அரைத்த மாவையே அரைக்கிறார்கள்” என்று கிண்டல் செய்கிறார்கள்.

செவ்வாயில் குடியேற நாள் பார்க்கும் இந்த நேரத் தில், வேதபாடசாலைக்கு வேலை என்ன? என்று யாரும் கேட்பதில்லை; சிந்திப்பதில்லை. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் பார்ப்பான் தன் தொழிலுக்கு ஏற்றவாறு விஞ்ஞானத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தான் மட்டும் மேலோங்க எல்லாவற்றையும் செய்து கொள்வான்.

இதையெல்லாம் நன்கு ஆய்ந்து அறிந்து நம் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் பெரியார் கொள்கை கள் நிலைத்து நிற்க, கொள்கைகளைப் பரப்பிடப் பயிற்சி பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பித்ததுதான் “ஈ.வெ.ரா. இராமசாமி-நாகம்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை”.

பெரியார் காட்டிய வழியில் கட்சியை வழிநடத்தி கிராமங்கள் தோறும் பிரச்சாரக் கூட்டங்கள், ஓரிடத்தை மையமாகக் கொண்டு பயிற்சி வகுப்பு நடத்துதல் என்று தனது 92 வயதிலும் சளைக்காமல் எதிர்நீச்சல் போட்டு நடத்தி வருகிறார்.

பெரியாரின் கொள்கைகளை நிலைநிறுத்தும் இந்தப் பயிற்சியில் ஒவ்வொரு ஆண்டும் 25 நபர்கள் பயிற்சி பெற்று அவர்களில் ஒருவர், இருவர் உருவானால் அதுவே பெரிய வெற்றியாகும்.

அவ்வாறான பயிற்சி வகுப்பைத்தான் கடந்த ஆண்டு அம்பத்தூரில் இயங்கிவரும் பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் 28 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, தொடர்ந்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு தமிழனும் தனது வருங்காலத் தலைமுறைக்காக, இழிவு நீங்கி தன்மானத்துடன் வாழக் களப்பணியாற்றுவதும், பயிற்சி பெறுவதும் முதன்மையான பணிகளாகும்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், அதன் பொதுச் செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து அவர்களும் தங்கள் சக்திக்கு மீறி, மிகுந்த பண நெருக்கடியான நிலையிலும் சென்னையில் அறக்கட்டளையை நிறுவிச் சிறப் பாக நடத்தி வருகிறார்கள். அங்கே தரமான நூல் நிலையமும் இயங்கி வருகிறது.

தனது 92 வயதிலும் எந்தச் சுணக்கமும் இல்லா மல், தமிழன் இழிவு நீங்கிட எல்லாருக்கும் எல்லாம் சமமாகக் கிடைத்திட கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறார், தோழர் வே. ஆனைமுத்து. அவர் வாழும் வரையிலாவது நாமும் அவருடன் சேர்ந்து ஏதோ ஒரு வகையில் அவருக்குப் பக்கபலமாக இருந்தாலே நாம் நம் தலைமுறையினருக்குச் செய்யும் தலையாய கடமையாகும். அவரின் வழிகாட்டுதலோடு, நல்வழி நடப்போம் வாரீர்!

Pin It