புதிய ஏற்பாட்டின் போர்ச்சுக்கீஸ் மொழி முதல் பதிப்பு 1681ஆம் ஆண்டில் அச்சுக்கு வந்தது. இது தமிழ்க் கடற்கரைப் பகுதியில் இருந்த ஐரோப்பியர்களுக்கு வழங்கப்பட்டது. பதிவேடுகளின்படி பார்த்தால், போர்ச்சுக்கீஸ் மொழி அறிந்த ஐரோப்பியர், உள்ளூர் மக்கள் ஆகியோரின் கைகளில் தவழ விடப்பட்டது.1 தமிழ்க் கடற்கரைப் பகுதி மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரே ஐரோப்பிய மொழியாக போர்ச்சுக்கீஸ் விளங்கியது. மதப்பரப்புரையாளரான சீகன்பால்கு தன்னுடைய 25-09-1706 நாளிட்ட கடிதத்தில் சில நாட்களுக்கு முன் தான் கிறித்துவத்தின் 36 கொள்கைகள் பற்றிய சிறிய அறிவுறுத்தல், உண்மையான மனந்திரும்புதலுக்கான ஒரு பிரார்த்தனை ஆகியவற்றைப் போர்ச்சுக்கீசியத்தில் மொழிபெயர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.2tharangabadi 700பட்டாவியாவில் (ஜகார்த்தா) இருந்த நற்செய்தி தேவாலயத்தில் சேர்ந்திருந்த (மேனாள் உரோமன் கத்தோலிக்க மதகுரு) ஜோவா பெரைரா அன்னேஸ் டி அல்மெய்டா என்பவர் போர்ச்சுக்கீசியத்தில் மொழிபெயர்த்திருந்த புதிய ஏற்பாட்டின் படிகள் தரங்கம்பாடியில் இருந்த லூத்தரன் மதப்பரப்புரையாளர்களுக்குக் கிடைத்தன. அவருடைய நூலான புதிய ஏற்பாடு முதலில் பட்டாவியாவில் அச்சிடப்பட்டது.3

பின்னர் அந்நூல் 1712ஆம் ஆண்டில் ஆம்ஸ்டெர்டாம் நகரில் அச்சடிக்கப்பட்டது.4 தரங்கம்பாடியில் இருந்த மதப்பரப்புரையாளர்கள் தங்களுடைய பயன்பாட்டுக்காக 214 படிகளைப் பெற்றுக் கொண்டனர். கிறித்துவக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்காக போர்ச்சுக்கீஸ் பேசும் மக்கள்தொகையை அதிகரிக்கும் முயற்சியில் அவர்கள் இந்த பைபிளைப் பயன்படுத்தினர்.5

லூத்தரன் மதப்பரப்புரையாளர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மார்ட்டின் லூதர் எழுதியிருந்த புரோட்டஸ்டன்ட் நம்பிக்கைகள் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருமுறை தரங்கம்பாடியில் பிரசங்கம் செய்தார்கள். அதற்கு அவர்கள் டச்சுக்காரர்கள் பட்டாவியாவில் அச்சிட்டிருந்த ஞானோபதேச நூலைப் பயன்படுத்தினர். தரங்கம்பாடியில் இருந்த தமிழ் - போர்ச்சுக்கீசியர்களை இறைப்பணி செய்ய வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று கோபன்கேகனில் இருந்த மதத்தளக் கல்லூரி வலியுறுத்தியது. டேனிஷ் குடியேற்றத்தில் போர்ச்சுக்கீஸ் மொழியில் பிரசங்கம் செய்வதையும் எழுப்பப்படும் வினாக்களுக்கு விடையளிப்பதையும் மேற்கொள்வது முக்கியமான பங்காகக் கருதப்பட்டது.6 குழந்தைகளுக்கு போர்ச்சுக்கீஸ் மொழியைக் கற்பிக்குமாறும், புதிய ஏற்பாட்டின் உள்ளடக்கங்களை போர்ச்சுக்கீஸ் மொழியில் வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மதம் தொடர்பான அறிவுறுத்தல்களைப் போர்ச்சுக்கீஸ் மொழியில் வழங்குமாறும், போர்ச்சுக்கீஸ் கலப்பின தமிழர்களுக்கு தேவாலயப் பணிகளைச் செய்வதற்கான அச்சிட்ட புத்தகங்களை வழங்குமாறும் மதப்பரப்புரையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.7

போர்ச்சுக்கீஸ் மொழியில் நூல்களை அச்சிடல், 1712-1744

டேனிஷ் மதத்தளத்தின் உலகியல் மற்றும் ஆன்மீக நன்மை கருதியே தரங்கம்பாடியில் அச்சுக் கூடம் நிறுவப்பட்டது. போர்ச்சுக்கீஸ் அச்செழுத்துகள் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அச்சகம் தோன்றிய பின் இந்துக்களுக்குத் தேவையான அளவில் அச்சிட்ட நூல்கள் வழங்கப்பட்டன. கடவுள், கிறித்தவ நம்பிக்கை குறித்த கட்டுரைகள், கிறித்துவத்தின் கடமைகள், இறைவனின் புனிதமான பெயரைப் போற்றுவதற்கான புதிய அறிகுறிகள், புதிய தனி உதாரணமான இறைவனின் இரக்கம், புகழைப் பெறுவதற்காக வலியையும் செயலையும் பொறுத்தல், எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தல் ஆகியன நிறைவு செய்யப்பட்டதாகவும் சீகன்பால்கு 1715ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார்.8 போர்த்துக்கீசிய எழுத்துருக்களுடன் கூடிய அச்சகத்தை வைத்திருந்தது, அவர்களின் அக்கறையை நினைவு கூர்வதாகவும், பின்னர் நூல் வெளியீட்டில், இந்த நினைவு நீடித்ததாகவும் சீகன்பால்கு தன்னுடைய கடிதமொன்றில் குறிப்பிட்டார்.9

டேனிஷ் மதத்தளத்தில் பணியாற்ற வந்த ஜோகன் எர்னஸ்ட் குருண்ட்லர் என்ற மதப்பரப்புரையாளர் ஸ்பெனர் என்பவர் எழுதிய பிராங்க்பர்ட் ஞானோபதேசம் என்ற நூலின் சாரத்தைச் சுருக்கமாக போர்த்துக்கீசியத்தில் மொழிபெயர்த்தார்.10 1714ஆம் ஆண்டில் இருந்த நூற்பட்டியலில் அச்சிடப்பட்ட மூன்று போர்த்துக்கீசியப் புத்தகங்கள் இருப்பதை நாம் காணலாம்.11 ‘கிறித்துவைப் பின்பற்றுதல்’ என்ற நூலை தாமஸ் கெம்பிஸ் என்பவர் இலத்தீனில் எழுதியிருந்தார். அந்நூலை லிஸ்பனைச் சேர்ந்த டியாகோ வாஸ் கரில்கோ என்பவர் போர்த்துக்கீசியத்தில் மொழிபெயர்த்தார். 1724ஆம் ஆண்டில் இந்நூல் மக்களுக்குப் பயன்படுவதற்காக மதப்பரப்புரையாளர்களால் தரங்கம்பாடியில் மீண்டும் அச்சடிக்கப்பட்டது.12

‘Difference da Christandade’ என்ற நூலின் முதல் பதிப்பு தரங்கம்பாடியில் 1726ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இந்நூல் 1728ஆம் ஆண்டில் மறுஅச்சானது.13 மிகவும் அரிய புனிதப் பாடல்கள் அடங்கிய நூல் 1744ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது.14

பழைய ஏற்பாடு தரங்கம்பாடியில் போர்ச்சுக்கீஸ் மொழியில் அச்சிடப்படல், 1719, 1721, 1732, 1738, 1740, 1744, 1751, 1757

பட்டாவியாவில் இருந்த நற்செய்தி தேவாலயத்தைச் சேர்ந்திருந்த ஜோவா பெரைரா டி அல்மெய்டா போர்ச்சுக்கீஸ் மொழியில் மொழிபெயர்த்திருந்த புதிய ஏற்பாடு புரோட்டஸ்டன்டு மதப்பரப்புரையாளர்களுக்குக் கிடைத்தது.15 இவரின் மொழிபெயர்ப்பை டச்சுக்காரர்கள் மிகவும் விரும்பினர். இந்நூலை டச்சுக்காரர்கள் நான்மடி அளவில் இருமுறை அச்சிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ஆங்கிலேயர் மிகப் பெரிய செலவில் எண்மடி அளவில் இந்நூலை 1712ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் அச்சடிக்க நேரிட்டது. அவர்கள் தரங்கம்பாடியில் இருந்த மதப்பரப்புரையாளர்களுக்கு அந்நூலின் 214 படிகளை அனுப்பித் தந்தனர். போர்த்துக்கீசிய மொழியில் புத்தகங்களை அச்சிடுவதில், அதிலும் குறிப்பாக பழைய ஏற்பாட்டின் பைபிளை வெளியிடுவதில், அதிலும் சிறப்பாக பழைய ஏற்பாட்டின் பைபிளை வெளியிடுவதில் மதப்பரப்புரையாளர்கள் பேரார்வம் காட்டினர். அது தரங்கம்பாடியில் வாழ்ந்த போர்ச்சுக்கீஸ் பேசிய பேரளவிலான சமுதாய மக்களிடையே பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப் பெரிதும் தேவைப்பட்டது. அவர்கள் பழைய ஏற்பாட்டை அச்சிட எண்ணி முடிவு செய்தனர். பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்கள் குருண்ட்லரால் மொழிபெயர்க்கப்பட்டு 1719ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் அச்சுக்கு வந்தது.16 பரவலாக வழங்கலுக்குத் தேவைப்படும் என்ற நம்பிக்கையே இவ்வாறு நிகழ முக்கியக் காரணமாகும். பெஞ்சமின் சுல்ட்ஸ் என்ற மதப்பரப்புரையாளர் மொழிபெயர்த்திருந்த பழைய ஏற்பாட்டினுடைய புனிதப் பாடல்கள் 1721ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன.17tharangabadi printing machineஓசியா, ஜோயல், அமோஸ், ஒபதியா, ஜோனா, மிக்கா, நகூம், ஹபக்குக், ஹக்காய், ஜக்காரியா, மலாக்கி ஆகிய இளந் தீர்க்கதரிசிகளின் நூல்களை உள்ளடக்கிய பழைய ஏற்பாட்டை தரங்கம்பாடி மதப்பரப்புரையாளர்கள் மீண்டும் அச்சிட்டனர். நிக்கோலஸ் தால், கிறிஸ்தோப் தியோடோசியஸ் வால்தர் ஆகியோர் இந்நூலை மொழிபெயர்த்ததோடு, போர்த்துக்கீசிய பதிப்பிலிருந்து இதை மிகக் கவனத்துடன் உருவாக்கினர். இந்நூல் 1732ஆம் ஆண்டில் தரங்கம்பாடி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.18

ஜோசுவா முதல் எஸ்தர் வரையான நூல்ளுடன் பழைய ஏற்பாடு 1738ஆம் ஆண்டில் தரங்கம்பாடி மதப்பரப்புரையாளர்களால் அச்சிடப்பட்டது. இந்நூல் ஜோவா பெரைரா டி அல்மெய்டா மொழிபெயர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் தரங்கம்பாடி மதப்பரப்புரையாளர்களால் திருத்தம் செய்தனர்.19 ஜோவா பெரைரா டி அல்மெய்டா போர்த்துக்கீசியத்தில் மொழிபெயர்த்த பழைய ஏற்பாட்டின் புனிதப் பாடல்கள் 1740ஆம் ஆண்டில் அச்சுக்குக் கொண்டு வரப்பட்டன.20

ஜோவா பெரைரா டி அல்மெய்டா போர்த்துக்கீசியத்தில் மொழிபெயர்த்த பழைய ஏற்பாட்டின் உள்ளடக்கங்கள் 1744ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன. இந்நூலின் முன்னுரை 14-09-1744 என்று நாளிடப்பட்டது.21

மூத்த தீர்க்கதரிசிகளின் நூல்களை உள்ளடக்கிய பழைய ஏற்பாட்டை கிறிஸ்தோப் தியோடோசியஸ் வால்தர் மொழிபெயர்த்திருந்தார். இந்நூலை தரங்கம்பாடி மதப்பரப்புரையாளர்கள் 1751ஆம் ஆண்டில் அச்சிட்டனர். இந்த மொழிபெயர்ப்புகள் ஜோவா பெரைரா டி அல்மெய்டாவை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் இந்த முழு நூலும் கிறிஸ்தோப் தியோடோசியஸ் வால்தர் என்ற தரங்கம்பாடி மதப்பரப்புரையாளரால் திருத்தப்பட்டது.22

மோசசின் ஆதியாகமம், யாத்திராகமம், மற்றும் எண்கள்ஆகமம், உபாகமம் ஆகிய மோசசின் ஐந்து நூல்கள் 1717ஆம் ஆண்டில் வெளிவந்திருந்தன. அவை 1757இல் மறுபதிப்பு கண்டன.23 இதன் முன்னுரையில் மதப்பரப்புரையாளர்கள் சில செய்திகளைத் தெரிவித்தனர். இதன் முதல் மொழிபெயர்ப்பு பழைய ஏற்பாட்டின் போர்த்துக்கீசிய பதிப்பில் இருந்து தமிழில் செய்யப்பட்டதாகவும், அது சிறப்பானதாகவும், படிப்போர்க்கும் இன்பம் தருவதாகவும் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, புதிதாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பிழைகளும், அச்சுப்பிழைகளும் சரிசெய்யப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் ஐரோப்பாவில் பின்பற்றப்படும் சரியான முறையைப் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தரங்கம்பாடியில் 1760, 1765 ஆகிய ஆண்டுகளில் தரங்கம்பாடியில் போர்ச்சுக்கீஸ் மொழியில் புதிய ஏற்பாடு அச்சிடப்படல்

தரங்கம்பாடி மதப்பரப்புரையாளர்கள் 1760ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டை அச்சிட்டனர். இம்மொழி பெயர்ப்புகள் ஜோவா பெரைரா டி அல்மெய்டாவை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இது தரங்கம்பாடி மதப்பரப்புரையாளர்களால் திருத்தப்பட்டது.24

ஜோவா பெரைரா டி அல்மெய்டா போர்த்துக்கீசியத்தில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு தரங்கம்பாடி மதப்பரப்புரையாளர்களால் திருத்தப்பட்டு 1765ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டது.25

முடிவுரை

அச்சுக் கோப்பவராகவும், அச்சடிப்பவராகவும் ஜோவா என்ற போர்த்துக்கீசியர் தரங்கம்பாடியில் இருந்தார். 1760ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை போர்த்துக்கீசிய நூல்களை உருவாக்குவதில் உழைத்திருக்கிறார். போர்த்துக்கீசிய கலப்பின தமிழர் சமுதாயத்தின் பிரார்த்தனைக் கூடத்தில் உறுப்பினராய் இருந்தவர்களுக்கு தமிழை நன்கு புரிந்து கொள்ளவும் பேசவும் தெரிந்திருந்தாக மதப்பரப்புரையாளர்களின் குறிப்பேடுகள் குறிப்பிடுகின்றன. எனவே, 1780ஆம் ஆண்டில் தரங்கம்பாடி தேவாலயத்தில் தெய்வீகப் பணிகள் அனைத்தும் தமிழில் நடத்தப்பட்டன.26 தரங்கம்பாடி மக்களின் பயன்பாட்டுக்காக மார்ட்டின் லூதரின் ஞானோபதேசம் 1763ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இதன் இரண்டாம் அச்சாக்கம் 1792ஆம் ஆண்டில் நடந்தது.27 புரோட்டஸ்டன்டு மதப்பரப்புரையாளர்கள் தமிழும் போர்த்துக்கீசியமும் அறிவாற்றலுக்கும் எழுதுவதற்கும் உகந்தமொழி என்றுணர்ந்தனர். போர்த்துக்கீசியம், டேனிஷ் ஆகியவற்றின் கலவை மொழியை போர்த்துக்கீசிய சமுதாயம் புரிந்து கொண்டதை தரங்கம்பாடியில் இருந்த மூன்று டேனியர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அடிக்குறிப்புகள்

1.     J. S. Cummims, The Travels and Controversies of Friar Domingo Navarrete, 1618-1686, London, 1910, p. 302.

2.     E. Arno Lehmann, It Began at Tranquebar (Translated by M.J. Lutz), Madras, 1956, p. 10

3.     Ibid., pp. 83-84.

4. O Novo Testamento: Isto he, todos os Sacro Sanctos Livros e Escritos evangelicos e apostolicos do novo concerto de nosso Fiel Senhor Salvador e Redemptor Jesu Christo: Traduzido em Portugues pelo Padre Joam Ferreira d’ Almeida, Ministro Pregador do Sancto Evangelo, Com todas as Licencas Necessarias, em Amsterdam, por Joam Crellius, 1712.

5.     E. Arno Lehmann, It Began at Tranquebar, pp. 35-36.

6.     Archiv der Franckesche Stiftungen, Halle (hereafter AFSt), IC 16: 40

7.     AFSt, IB2: 6-4.

8.     A Brief Account of the Measures taken in Denmark for the Conversion of the Heathen in the East Indies, London, 1715, pp. 11–12.

9.     Ibid., p. 26.

10. E. Arno Lehmann, It Began at Tranquebar, p. 119.

11. S. Jeyaseela Stephen, Tamil History: The Spread of the Publishing Industry and Technology, 1578-1873, New Delhi, 2020, p. 57.

12. Imitacam de Christo: Dividida em tres livros escritos em Latin pelo veneravel Thomas de Kempis no anno de 1441 traduzidos em Portugues por Diogo Vaz Carrilho, Natural de Lisboa, Trangambar, Officina da Real Missao de Dinamarca, 1724.

13. Sachsische Landesbibliothek, Dresden (hereafter SLBD), Differenca da christandade em que claramenta se manifesta a grande desconformidade entre a verdadeira e antiga doutrine de Deus e a falsa e novo doutrina dos homens traduzia de castelhano em Portuguez pelo P. Joam Ferreira A. D’ Almeida, ministro pregador do S. Evangelho na India Oriental, Conforme a Impressao de Batavia de 1660, Segunda Impressao, Trangambar, na officinal de Real Missao de Dinamarca anno de 1728.

14. Psalmodia Evangelica, ou livro de cantigas espirituaes, tiradas de varios textos e muytos lugares da escritura sagrada, da theologia positiva e moral, e de outros livros asceticos, Trangambar, Officina da Real Missao de Dinamarca, 1744.

15.  British Library, London (hereafter BL), Microfilm, Eighteenth Century Collections, Range 11168, Novo Testamento traduzido em Portuguez pelo padre Joam Perrieria d’ Almeida.

16. AFSt, C 55, Os cinco livros de Moyses, chamados I. Genesis, II. Exodo, III. Levitico, IV. Numeros, V. Deuteronomio. Com privilegio real, Tranquebar, Em India Oriental na Costa de Coromandel, na officina real Missao de Dinamarca, Anno de 1719.

17. O Livro dos Psalmos de David com toda diligencia traduzido de texto original na lingoa Portuguesa, conferido com as outras translacoens e em muitos passos declarado pelo padre Benjamin Schultze, missionario del rey de Dinamarca e minstro palavara de Deus, Trangambar em India Oriental na costa de Coromandel, na estampa da Real Missao, no anno de 1721.

18. AFSt, Halle, C 54; Biblioteca do Exército, Lisboa (hereafter BEL), Cota: 11232-19-4. Os Doze prophetas menores, convem a saber, Hoseas, Jowl, Amos, Obadias, Jonas, Micheas, nahum, Habacuc, Sophonias. Haggeo, Zacharias, Malachias, Com toda diligencia traduzidos na Lingoa Portugueza pelos padres Missionarios de Trangambar, Trangambar, na officina da real missao de Dinamarca, Anno de 1732.

19. Bibliothek der Franckesche Stiftungen (hereafter BFSt), Halle, 66 C 12; Biblioteca do Exército, Lisboa, Cota: 11229-19-4. Os livros historicos do velho testamento, convem a saber, o livro de Josue, o livro dos Juizes, o livro de Ruth,o primeior livro de Samuel, o Segundo livro de Samuel, o primeior livro des reys, o Segundo livro dos reys, o primeior livro das chronicas, o Segundo livro das chronicas, o livro de Esdras, o livro de Nehemias, o livro de Esther,: Traduzidos na lingoa Portugueza pelo Reverendo Padre Joam Ferreira A. D’Almedia, ministro Pregador do santo Evangelho na Cidade de Batavia; revistos e conferidos com o Texto original pelos padres Missionarios de Trangambar, Trangambar, na officina da real missao de Dinamarca, Anno de 1738. There is also a copy of the book at British Library, London.

20.  AFSt, 63 F 26, O Livro dos Psalmos de David traduzido na lingoa Portuguesa, pelo reverend padre Joam Ferreira A. D’Almeida minstro pregador do santo evangelho na cidade Batavia; revisto e conferido com on texto original pelos padres missionaries de Trangambar, Trangambar, na officina da real Missao de Dinamarca, anno de 1740.

21.  BEL, Cota: 11230-19-4. Os Livros dogamticos do velho testament, convem a saber, O livro de Job, os Psalmos de David, os proverbios de Salao, os ecclesiastes de Salamao, os cantares de Salamao, traduziods na lingoa portuguesa pelo reverend Padre Joam Ferrreira a. D’ Almeida, ministro pregador do santo Evangelho na cidade de Batavia; revistos e conferidos com o texto original pelos padres missionaries de Trangambar, Trangambar, na officinal da real Missao de Dinamarca anno de 1744.

22. BFSt, 66 C 12; Biblioteca do Exército, Lisboa, Cota: 11231-19-4. Os quatro prophetas mayors, convem a saber, Esaias, jeremias, com as lamentacoens de Jeremias, Ezechiel, Daniel: Dos quaes os tres primeiors sao traduzidos pelo reverendo Padre Joam Ferreira A.d’ Almedia, Ministro Pregador do santo Evangelho na cidade de Batavia; e quarto pelo Reverendo Padre Christovao Theodosio Walther, Missionario de Trangambar: mas todos revistos e conferidos com o Texto original pelos padres Missionarios de Trangambar, Trangambar, na officina da real missao de Dinamarca, Anno de 1751.

23.  BFSt, 66 C 12 (1). Os Cinco Livros de Moyses, convem a saber, I. Genesis, II, Exodo, III. Levitico, IV. Numeros, V. Dueteronomio: traduzidos na lingoa Portugueza Pelo Reverendo Padre Joam Ferreira A. D’Almeida, ministro Pregador do santo Evaneglho na Cidade de Batavia; Revistos e conferiods com o texto Original Pelos Padres Missionarios de Trangambar, Trangambar, na officina da real missao de Dinamarca, Anno de 1757.

24.  Primeria parte do novo testamento de nosso Senhor, e salador Jesus Christo, que contem os quarto Evangelistos convem a saber: S. Matheus, S. Marcos, S. Lucas, S. Joao, Traduziods em linguae Portugueza pelo Reverendo Pdre Joao Ferreira A. de Almeida Ministro pregador do Santo Evangelho na cidade de Batavia, Revistos e conferidos com on texto original pelos padres Missionarios de Trangambar, na officina da real misssao de Dinamarca, Anno de 1760.

25.  BEL, Cota: 11233-19-4. O Novo Testamento: isto he todos os sacrosantos livros e escritos evangelicos e apostolicos do novo concerto de Nosso Senhor e Redemptor Jesu Christo / trad. Padre d’Almeida; rev. Missionarios de Trangambar, Trangambar, na officina da Real Missão da Dinamarca, 1765.

26.  Georg Christian Knapp, et.al ed. Neuere Geschichte der Evangelischen Missions-Anstaltenzu Bekehrung der Heiden in Ostindien, Waisenhaus, Halle 1770–8/95, 1848, vol. III, p. 38.

27.  Det Kongelige Bibliotek, Kobenhavn, (hereafter KB), 3-470, O catechism menor para o uso da escola Portugueza,, Segunds Impressao, Trangambar, na officina da Real Missao de Dinamarca, anno de 1792.

- எஸ். ஜெயசீல ஸ்டீபன், வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்